விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் பாரதியிடம் கண்ணம்மா, தான் உண்மைநான கண்ணம்மாவே கிடையாது, தன்னுடைய சித்ரா என்பதையும், கண்ணம்மா என்கிற பெயரில் ஆள்மாறாட்டம் செய்திருப்பதையும் போட்டு உடைத்து வருகிறார். இதனால் கண்ணம்மாவை காதலித்து வந்த பாரதி மனம் உடைந்து போயிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. விஜய் டிவியில் கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வந்த பாரதிகண்ணம்மா தொடர் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து இந்த தொடரின் இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என்று நாடகக் குழு அறிவித்து இருந்தது. முதல் பாகம் முடிவடைந்த ஒரு வாரத்திலேயே இரண்டாவது பாகத்தை எடுத்து அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தனர் நாடகக் குழுவினர். இந்த நாடகத்தில் பாரதியாக சிபுசூரியனும் கண்ணம்மாவாக வினுஷா தேவியும் நடித்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சிபுசூரியன் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ரோஜா தொடரில் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த தொடரின் மூலமாக அவருக்கு தனி ரசிகைகள் பட்டாளம் இருந்தது. இந்த நிலையில் அவர் சன் டிவியில் இருந்து விலகி விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா தொடரில் ஹீரோவாக ஒப்பந்தமானார். ஆரம்பத்தில் இந்த தொடருக்கு ஆரம்பத்தில் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இருந்தபோதிலும் தற்போது இந்த சீரியல் கொஞ்சம் கொஞ்சமாக வரவேற்பு பெற்று வருகிறது. கதைப்படி இந்த சீரியலில் வினுஷா தேவி சித்ரா என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கத் தொடங்கினார். அவர் சிறை கைதியாக ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார். பின்னர் அவர் சிறையில் இருந்து விடுதலை ஆகி பேருந்தில் சென்று கொண்டிருக்கிறார். அப்போது கண்ணம்மா என்கிற ஒரு பெண்ணை சந்திக்கிறார். கண்ணம்மாவை திடீரென ரவுடிகள் துப்பாக்கியால் சுட்டுவிட நான்தான் கண்ணம்மா என்று பொய் சொல்லி கண்ணம்மாவின் குடும்பத்திற்குள் நுழைகிறார் சித்ரா.
கண்ணம்மாவாக வாழ்ந்து வரும் சித்ராவை பலரும் கண்ணம்மா என்ற நம்பி ஏற்றுக் கொள்கின்றனர். அதேபோல பாரதியும் சித்ரா தான் கண்ணம்மா என்று நம்பி அவரை காதலித்து வருகிறார். இந்த நிலையில் அவர் தனது காதலை கண்ணம்மாவிடம் தெரியப்படுத்துகிறார். தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் தான் கண்ணம்மா கிடையாது சித்ரா என்று உண்மைகளை போட்டு உடைக்கிறார். இதனால் மனம் உடைந்து போன பாரதி அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் நிலை குலைந்து போயிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Vijay Television