தீனா திருமண வரவேற்ப்பில் தங்க மோதிரம் பரிசு கொடுத்த KPY பாலா..! அவரே வெளியிட்ட வீடியோ.!

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலரின் மனங்களை கொள்ளை கொண்ட தீனாவிற்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. அவரது திருமண வரவேற்பு நேற்று சென்னையில் வைத்து மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்று இருக்கிறது. அதில் கலந்து கொண்ட பாலா தீனாவிற்கு தங்க மோதிரம் ஒன்றை பரிசாக அளித்திருக்கிறார். அந்த வீடியோவை பாலா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோவிற்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது. நண்பன் என்றால் பாலா போல இருக்க வேண்டும் என்று பலரும் பாலாவிற்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். சினிமா துறையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று சென்னைக்கு வந்தவர்கள் பலர் உண்டு. அந்த வரிசையில் சென்னைக்கு வந்து சாதித்த இருவர் தான் தீனா மற்றும் பாலா. நடுத்தர ஏழை குடும்பத்தில் பிறந்த இவர்கள் காமெடியில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று சென்னைக்கு வந்து விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தீனா திருமண வரவேற்ப்பில் தங்க மோதிரம் பரிசு கொடுத்த KPY பாலா..! அவரே வெளியிட்ட வீடியோ.! 1

விளம்பரம்

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கு பின்னர் மிகவும் அறியப்பட்ட நபர்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர் பாலாவும் தீனாவும். இதில் பாலாவுக்கு குக் வித் கோமாளி என்று நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர் பாலாவின் ரசிகர் பட்டாளம் பெருகி இருக்கிறது. தற்போது பாலா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் நடித்த வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் கலக்கப்போவது யாரு சாம்பியன் என்ற நிகழ்ச்சியையும் பாலா தொகுத்து வழங்கி வருகிறார். அதேபோல் நிகழ்ச்சியின் நடுவர்கள் மற்றும் போட்டியாளர்களை கால் செய்து கலாய்த்து பேசுவதன் மூலமாக பலரின் மனங்களில் இடம் பிடித்தவர் தீனா. இவளது டைமிங் காமெடிகளுக்காகவே பலரும் தீனாவிற்கு ரசிகர்களாக மாறிப் போயிருந்தனர். இருவரும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் டைட்டிலை வெல்ல முடியாத நிலையிலும் பலரின் மனங்களை வென்றிருக்கின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் தீனாவிற்கு ஆடை வடிவமைப்பாளராக இருக்கும் பிரகதியுடன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தின் வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் வைத்து நேற்று நடைபெற்றது.

தொடர்புடையவை  உனக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்ல.. Thanks அமீர்..Liveல் அமீர்க்கு நன்றி சொன்ன பாவனி

தீனா திருமண வரவேற்ப்பில் தங்க மோதிரம் பரிசு கொடுத்த KPY பாலா..! அவரே வெளியிட்ட வீடியோ.! 3
இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு விஜய் டிவியின் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் பாலாவும் தனது நண்பனில் திருமண வரவேற்பில் கலந்து கொண்டார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக தங்க மோதிரம் ஒன்றை தீனாவிற்கு பரிசளித்து அவரை கட்டி அணைத்து முத்தம் கொடுத்தார். இதனால் தீனாவும் மகிழ்ந்து போயிருக்கிறார். அந்த வீடியோவை பாலா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்

Leave a Comment