விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்றுதான் பாரதி கண்ணம்மா. இந்த தொடர் கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கி 5 வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கிறது. அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பதால் பலருக்கும் இந்த நாடகத்தை பார்க்க சலிப்பு ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் கண்ணம்மாவாக ரோஷினி நடித்து வந்தார். அவர் குக் வித் கோமாளியில் பங்கு பெறுவதற்காக நாடகத்தை விட்டு விலகினார். அவர் விலகலுக்குப் பின்பு டிஆர்பியில் சரிவு ஏற்பட்டது. அதன் பிறகு வினிஷா தேவி கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பலரும் இந்த சீரியலை விட்டு விலகி சென்று விட்டனர். இருந்தபோதிலும் இந்த சீரியல் இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தால் போதும், இந்த கதை முடிவுக்கு வந்துவிடும். ஆனால் அதை செய்யாமல் கதையை இழுத்து அடித்து வருகின்றனர். பலரும் இந்த கதையை முடித்து விடுமாறு சமூக வலைத்தளங்களில் நாடகத்தின் இயக்குனருக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

இந்தத் தொடரில் குழந்தை கதாபாத்திரமாக லெட்சுமி கேரக்டரில் நடித்து வருபவர் ராக்ஷி. இவர் கதைப்படி கண்ணம்மாவிடத்தில் வளர்ந்து வருகிறார். இன்னொரு குழந்தையான ஹேமா பாரதியிடம் வளர்ந்து வருகிறார். கதையின் பிரச்சினையே கண்ணம்மாவிடம் வளரும் இந்த லட்சுமி தன்னுடைய குழந்தை இல்லை என்று பாரதி நம்புவது தான். இதில் இந்த லட்சுமி கதாபாத்திரத்தை நடிக்கும் ராக்ஷி மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இவர் கோலங்கள் என்ற நாடகத்தில் நடித்த ஷியாமின் இரண்டாவது மகள் ஆவார். கோலங்கள் நாடகத்தில் ஆர்த்தி என்ற கதாபாத்திரத்தின் கணவர் ரோலில் நடித்து இருப்பார் ஷியாம். அவரின் இரண்டாவது மகள் தான் ராக்ஷி. அவனின் மூத்த மகளும் ஒரு குழந்தை நட்சத்திரமாக பல நாடகங்களில் நடித்து வருகிறார். இந்த குழந்தைகள் இருவரும் இணைந்து youtube சேனல் ஒன்றையும் நடத்தி வருகின்றனர்.
ராக்ஷி Vibes என்ற அந்த youtube சேனலில் அடிக்கடி வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றனர் ராக்ஷியும் அவரது சகோதரியும். இந்த நிலையில் இன்று அவர்கள் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கின்றனர். அதில் தங்களது வீட்டை சுற்றி காட்டி ஹோம் டூர் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ பலராலும் பகிரப்பட்டு வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண.. Watch the below video..
Youtube Video Code Embed Credits: Raksha Vibes