பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க சொல்லி கண்ணம்மா பாரதியிடம் கூறுவது போலவும், பாரதி டிஎன்ஏ டெஸ்ட் எடுப்பது குறித்து யோசிப்பது போலவும் ப்ரோமோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள். பாரதி கண்ணம்மா சீரியல் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் இந்த சீரியலின் கதை கறுப்பாக இருக்கும் மருமகளை ஏற்றுக் கொள்ளாத மாமியார் என்ற ரீதியில் தான் தொடங்கினர். பின்னர் கதை எங்கெங்கோ நகர்ந்து விட்டது பாரதிக்கு குழந்தை பிறக்கும் பாக்கியம் இல்லை என்று அவரது தோழி வெண்பாவால் இவ்வளவு நாள் ஏமாற்றப்பட்டு வருவார். ஆனால் பாரதியை திருமணம் செய்து கொண்ட பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துவிடும். இதனால் பாரதி மனைவி கண்ணம்மா மீது சந்தேகப்பட்டு வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுவார்.

இரண்டு குழந்தைகளில் ஒன்று பாரதியிடமும், இன்னொன்று கண்ணம்மா விடமும் வளர்ந்து வருகிறது. ஆனால் பாரதிக்கு இரண்டுமே தன் குழந்தைகள் தான் என தெரியாமல் இருந்து வந்தது. தற்போது தான் அந்த விஷயம் பாரதிக்கு தெரிய வந்தது. இருந்தாலும் அவருக்கு குழந்தை பிறக்காது என்று வெண்பாவால் நம்ப வைக்கப்படுவதால் அவரால் இந்த குழந்தைகளை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் பாரதியின் மருத்துவமனையில் ஒருவர், இது தனக்கு பிறந்த குழந்தை இல்லை என்று சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். அங்கு வரும் பாரதி ஒரு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து பார்த்தால் இது யாருடைய குழந்தை என்று தெரிந்துவிடும் என்று அவரிடம் கூறுகிறார்.
அப்போது அங்கு வரும் கண்ணம்மா ஊருக்கு உபதேசம் செய்கிறீர்களே, நீங்கள் எப்போது டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க போகிறீர்கள் என்று கேட்கிறார். பாரதியின் மனசாட்சியும் கண்ணம்மா சொல்வதில் உண்மை இருப்பது போல தான் இருக்கிறது என்று கூறுகிறது. எனவே பாரதி டிஎன்ஏ டெஸ்ட் எடுப்பது குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறார். ரசிகர்கள் பலரும் இந்த நாடகத்தை விரைந்து முடிக்குமாறு கோரிக்கை விடுத்து வரும் நிலையில், டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தால் இந்த நாடகம் முடிந்து விடும் என்று பலரும் சந்தோஷத்தில் இருக்கின்றனர். நீங்களும் அந்த ப்ரோமோவை காண.. Watch the below video..
Youtube Video Code Embed Credits: Vijay Television