கண்ணம்மாவை வீட்டை விட்டு அடித்து துரத்திய பாரதி.! முடிவுக்கு வந்தது சீரியல்.! கடைசி ப்ரோமோ இதோ.!

வெளியிட்டது

பாரதி கண்ணம்மா சீசன் 2 விரைவில் முடிவுக்கு வரும் என்று இணையத்தில் சில நாட்களாக தகவல் பரவி வந்த நிலையில் தற்போது கடைசி ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சியே வெளியிட்டு இருக்கிறது. இதில் தற்போது பாரதி, கண்ணம்மாவை வீட்டை விட்டு வெளியே அனுப்புவது போலவும், இன்னும் மூன்றே நாட்களில் தன் மீது எந்த தவறும் இல்லை என்று நிரூபித்து மீண்டும் உங்களுடனே வந்து சேருவேன் என்றும் கண்ணம்மா சபதம் போடுவது போலவும் ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டு இருக்கிறது. மேலும் தொடர்ந்து மூன்றரை மணி நேரம் வரும் ஞாயிற்றுக்கிழமை இறுதி அத்தியாயங்கள் ஒளிபரப்பாக இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கண்ணம்மாவை வீட்டை விட்டு அடித்து துரத்திய பாரதி.! முடிவுக்கு வந்தது சீரியல்.! கடைசி ப்ரோமோ இதோ.! 1

பாரதி கண்ணம்மா சீசன் ஒன் கொடுத்த மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து பாரதி கண்ணம்மா சீசன் 2 எடுக்கப்பட்டது. ஆனால் சீசன் 1க்கு கிடைத்த அளவிற்கு சீசன் 2விற்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிலையில் தற்போது சீசன் 2 யாரும் எதிர்பாராத வண்ணமாக முடிவடைய இருக்கிறது.

இதில் சன் தொலைக்காட்சியில் ரோஜா சீரியலில் ஹீரோவாக நடித்த சிபு சூரியன் பாரதியாக நடிக்க, சீசன் 1ல் கண்ணம்மாவாக நடித்த வினுஷா தேவி இதிலும் கண்ணம்மாவாக நடித்து வந்தார். டிஆர்பி ரேட்டிங்கில் இந்த சீரியல் மிகப்பெரிய அடிவாங்கியது. நேரத்தை மாற்றியும் இந்த சீரியலுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் ராதிகா சரத்குமார் தயாரித்து வரும் கிழக்கு வாசல் சீரியல் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் தற்போது பாரதி கண்ணம்மா முடிவடைய இருக்கிறது. தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பாரதியின் தந்தையை கொலை செய்தது கண்ணம்மா தான் என்கிற உண்மை பாரதிக்கு தெரிய வருகிறது.

பாரதி சிறு வயது முதலே காதலித்து வந்த கண்ணம்மா ரவுடிகளால் கொலை செய்யப்பட்டு இறந்து விடுகிறார். பின்னர் ஜெயிலில் இருந்து விடுதலை ஆகி வரும் சித்ரா என்பவர் கண்ணம்மா என்கிற பெயரில் அவரது வீட்டிற்குள் நுழைகிறார். சித்ரா எதற்காக ஜெயிலுக்கு போனார் என்கிற கதையே தெரியாமல் இருந்த நிலையில் தற்போது பாரதியின் தந்தையை கொன்றவர் தான் சித்ரா என்றும், அவர்தான் கண்ணம்மாவாக இவர்கள் வீட்டில் நுழைந்து இருக்கிறார் என்கிற உண்மை அனைவருக்கும் தெரிய வருகிறது.

இதனால் கண்ணம்மாவை தற்போது வீட்டிலிருந்து பாரதி அடித்து துரத்துகிறார். மேலும் 3 நாட்களில் தன் மீது எந்த தவறும் இல்லை என்பதை நிரூபித்து மீண்டும் இந்த வீட்டிற்குள் வருவேன் என்று சொல்லி கண்ணம்மா சபதம் போடுகிறார். அத்துடன் இந்த ப்ரோமோ நிறைவடைகிறது. மேலும் இது வருகிற ஞாயிற்றுக்கிழமை மதியம் மூன்று மணி முதல் ஆறு முப்பது மணி வரை தொடர்ந்து மூன்றரை மணி நேரம் ஒளிபரப்பாக இருப்பதாகவும் விஜய் தொலைக்காட்சி அறிவித்துள்ளது. நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்