பாரதி கண்ணம்மா சீரியல் நடிகருக்கு இன்று திருமணம் நடைபெற்றுள்ளது. சத்தமில்லாமல் திருமணத்தை நடத்தி முடித்துள்ளார் அந்த நடிகர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் விறுவிறுப்பான ஒரு தொடர்தான் பாரதி கண்ணம்மா. இதில் அகிலன் கதாபாத்திரத்தில் ஹீரோவுக்கு தம்பியாகவும், இரண்டாவது ஹீரோவாகவும் நடித்து வருபவர் நடிகர் சுகேஷ்.
இவருக்கு நேற்று சென்னையில் வைத்து மிகப்பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. திருமணத்தை பற்றிய எந்த அறிவிப்பும் இல்லாமல், புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து இருக்கிறார் சுகேஷ்.
பாரதி கண்ணம்மா சீரியல் ஆரம்பத்தில் கறுப்பாக இருக்கும் மாமியாரை ஏற்றுக் கொள்ளாத மருமகள் என்பது போலத்தான் ஆரம்பித்தது. 2018ம் ஆண்டு தொடங்கிய இந்த சீரியல் 5 வருடத்தை நெருங்கி வருகிறது.
பிரவீன் பென்னட் இயக்கும் இந்த சீரியல் ஜவ்வாக இழுத்து வருவதால் ரசிகர்கள் பலரும் எரிச்சல் அடைந்துவிட்டனர். பலரும் இந்த சீரியலை பார்ப்பதை நிறுத்துவிட்டனர். சீரியலில் நடித்த பலருமர நாடகத்தில் இருந்து விலகி விட்டனர்.
இந்த சீரியலில் ஆரம்பத்தில் அகிலன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சீரியலில் இருந்து விலகிவிட அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வந்தார் சுகேஷ். இவர் தற்போது திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்.
திருமணத்தைப் பற்றிய எந்த அறிவிப்பும் வெளியிடாமல், புகைப்படங்களை மட்டுமே பகிர்ந்து இருந்தார். இவர்களின் திருமணத்தில் கண்ணம்மாவாக நடிக்கும் வினுஷா உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
மாடலிங் துறையில் பணியாற்றி வந்த காவ்யா என்பவரை மணம் முடித்து இருக்கிறார் சுகேஷ். இவருக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.