Categories: சினிமா

உடல்நிலையில் சிறிய முன்னேற்றம் கூட இல்லை, திடீரென பாரதிராஜா வேறு மருத்துவமனைக்கு மாற்றம்..என்ன ஆச்சு?

வெளியிட்டது

உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாரதிராஜாவின் உடல் நிலை மேலும் மோசமடைந்துள்ளது. இதனால் மேல் சிகிச்சைக்காக அரும்பாக்கத்தில் உள்ள எம் ஜி எம் மருத்துவமனைக்கு அவரை மாற்ற அவரது குடும்பத்தார் முடிவு செய்திருக்கின்றனர். தமிழ் சினிமாவின் முண்ணனி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் பாரதிராஜா. இவரைப் பொருத்தவரை எப்போதும் மண் சார்ந்த படங்கள் இப்படித்தான் எடுப்பார். இந்தப் படங்கள் அனைத்துமே காலத்தால் அழியாத படங்களாக இருக்கிறது. தற்போது 80 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் இளையராஜா படம் இயக்குவதை விட்டுவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். குணச்சித்திர வேடங்களில் பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் பாண்டியநாடு, ராக்கி, நம்ம வீட்டு பிள்ளை போன்ற பல படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார். கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.

உடல்நிலையில் சிறிய முன்னேற்றம் கூட இல்லை, திடீரென பாரதிராஜா வேறு மருத்துவமனைக்கு மாற்றம்..என்ன ஆச்சு? 1

சமீபத்தில் வெளியாகி வசூலை குவித்து வரும் தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் கூட தனுஷுக்கு தாத்தாவாக நடித்து இருப்பார். மேலும் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் இருக்கிறார். இந்த நிலையில் பாரதிராஜாவுக்கு கடந்த வாரம் தீடீரென உடல்நலக்குறைவு ஏற்ப்பட்டது. மதுரை விமான நிலையத்தில் மயக்கம் ஏற்பட்டதால் மதுரையிலே ஒரு நாள் தங்கி வீடு சென்னைக்கு திரும்பினார். அதன் பின் தன்னுடைய நீலாங்கரை இல்லத்தில் பாரதிராஜா ஓய்வெடுத்து வந்தார்.கடந்த 23ஆம் தேதி மீண்டும் உடல் நல குறைவு ஏற்பட்டு சென்னை தியாகராயநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவ குழுவினர் அவரை சோதித்துப் பார்த்ததில் நீர்ச்சத்து குறைபாடு இருப்பதை கண்டறிந்து அதற்கு தேவையான சிகிச்சைகள் வழங்கி வந்தனர். கடந்து கடந்த மூன்று நாட்களாக சென்னை நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்த அவர், மேல் சிகிச்சைக்காக தற்போது மருத்துவமனையை மாற்ற குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். அவர் உடல்நலம் பெற்று மீண்டும் பழைய பாரதிராஜாவாக வர வேண்டும் என்று பலரும் பிராத்தனைகள் செய்து வருகின்றனர். அந்த செய்தியை நீங்களும் காண… Watch the below Video..

Youtube Video Code Embed Credits: Polimer News

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்