பாரதிகண்ணம்மா சீரியல் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பாரதியை ஊரில் இருக்கும் பஞ்சாயத்து தலைவர்கள் ஊரை விட்டு வெளியே அனுப்ப முடிவெடுத்திருந்தனர். ஆனால் பாரதி ஊரை விட்டு போகாமல் மேள தாளங்களுடன் மீண்டும் கண்ணம்மா இருக்கும் ஊருக்குள்ளேயே என்ட்ரி கொடுக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடர் அடுத்தடுத்த விறுவிறுப்பான கட்டங்களை எட்டி வருகிறது. விரைவில் இந்த தொடர் முடியே இருப்பதாக பல தகவல்கள் வந்த போதிலும், அடுத்தடுத்த கட்டத்திற்கு கதை நகர்ந்து கொண்டே தான் இருக்கிறது. டி.என்.ஏ ரிசல்ட் மூலம் கண்ணம்மா தவறு செய்யவில்லை அவருக்கு பிறந்த இரண்டு குழந்தைகளும் தன் குழந்தைகள் தான் என்பதை தெரிந்து கொள்கிறார் பாரதி. இதனால் மீண்டும் கண்ணம்மாவிடம் சென்று சேர்ந்து வாழலாம் என்று காலில் விழுந்து கதறி கேட்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் கண்ணம்மாவோ தன்னை இத்தனை நாள் அசிங்கப்படுத்திவிட்டு இப்போது எங்கிருந்து உங்களுக்கு ஞானோதயம் வந்தது என்று கேட்டுவிட்டு ஊரை காலி செய்துவிட்டு தனது பிள்ளைகளுடன் கிளம்பி விடுகிறார். அவர் தனது தந்தையின் சொந்த ஊருக்கே சென்று விடுகிறார். அந்த கிராமத்தில் இருக்கும் பள்ளியில் தனது பிள்ளைகளை சேர்த்து விட்டு, அவரும் அங்கு மாவு அரைத்துக் கொடுத்தும் டைலரிங் வேலை பார்த்துக் கொடுத்தும் வாழ்க்கையை நகர்த்தலாம் என்று முடிவு செய்து இருக்கிறார். இந்த நிலையில் கண்ணம்மாவை தேடி திரியும் பாரதி ஒரு கட்டத்தில் கண்ணம்மா இருக்கும் ஊரை கண்டுபிடித்து வருகிறார். பாரதியை யார் என்றே உனக்கு தெரியாது எனது கையை பிடித்து இழுக்கிறார் என்று ஊரார் இடம் கண்ணம்மா போட்டுக் கொடுத்து விட்டார்.

இதனால் பஞ்சாயத்தை கூட்டி பாரதியை அந்த ஊரிலிருந்து விரட்டி அடிக்க பஞ்சாயத்து முடிவெடுக்கிறது. இதனால் அவரை எச்சரித்து அனுப்புகின்றனர். ஆனால் ஊரில் இருந்து செல்லாமல் பாரதி மேளதாளத்துடன் மீண்டும் ஊருக்குள்ளே வருகிறார். மேலும் அவர் எனக்கு முன்வைத்த காலை பின் வைக்க மாட்டேன் என்று கூறுகிறார். இந்த ப்ரோமோ மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண கீழே இருக்கும் வீடியோவை பார்க்கவும்..! Watch the below video..!
Youtube Video Code Embed Credits: Vijay Television