பின்னணி பாடகியும் இளையராஜாவின் மகளுமான பவதாரணி மறைவு ரசிகர்கள் பலரையும் கலங்கடிக்க வைத்துள்ளது. இந்த நிலையில் அவரது உடல் சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு பொதுமக்கள் மற்றும் திரைபிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் அஞ்சலி செலுத்த வந்த பாரதி ராஜா பவதாரிணியின் உடலைப்பார்த்து கதறி அழுத வீடியோ பலரையும் கலங்கடிக்க வைத்துள்ளது.1976ம் ஆண்டு இசையமைப்பாளர் இளையராஜா ஜீவா தம்பதிகளின் இரண்டாவது மகளாக பிறந்தவர் பவதாரணி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சிறு வயது முதலே இசை மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக தனது தந்தையின் வழிகாட்டுதலின் பேரில் படங்களில் பாடத் தொடங்கினார். சிறு குழந்தையாக பாடிக்கொண்டிருந்த அவர் 1995ம் ஆண்டு ‘ராசையா’ என்கிற பாடலை பாடியதன் மூலமாக பின்னணி பாடகியாக அறிமுகமானார். அதன் பின்னர் பல படங்களில் பாடியிருக்கும் அவர், ‘என்னை தாலாட்ட வருவாளா’, ‘ஒளியிலே தெரிவது தேவதையா’, ‘மயில் போல பொண்ணு ஒன்னு’, ‘தாலியே தேவையில்லை’, ‘ஏழேழு தலைமுறைக்கும்’ போன்ற பல நல்ல பாடல்களை தமிழ் திரை உலகத்திற்கு பாடியிருக்கிறார். கடைசியாக 2022ம் ஆண்டு வெளியான ‘மாமனிதன்’ படத்தில் ‘பண்ணைபுரத்து’ என்கிற பாடலை அவர் பாடி இருந்தார்.
இந்த நிலையில் புற்றுநோய் காரணமாக சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன் தினம் சிகிச்சை பலனின்றி இலங்கையில் உயிரிழந்தார். இது திரையுலகினர் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவரது இறுதி சடங்கு இன்று தேனியில் நடைபெறுகிறது. பாவதாரிணியின் உடலுக்கு பொதுமக்கள் மற்றும் திரைபிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் அஞ்சலி செலுத்த வந்த பாரதி ராஜா பவதாரிணியின் உடலைப்பார்த்து கதறி அழுது இருக்கிறார். அந்த வீடியோவை நீங்களும் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Puthiya Thalaimurai