வேதாளம் ஒரு க்ரிஞ் படம்.! போலோ ஷங்கர் இயக்குனர் சர்ச்சை பேச்சு.! வெளுத்து வாங்கிய அஜித் ரசிகர்கள்.!

வெளியிட்டது

வேதாளம் படம் பற்றி அந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்துள்ள இயக்குனர் தெரிவித்த சர்ச்சை கருத்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வேதாளம் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து போலோ சங்கர் என்கிற பெயரில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தை மெஹர் ரமேஷ் இயக்கியிருக்கிறார். தற்போது வேதாளம் படத்தை அவர் க்ரிஞ்ச் என விமர்சித்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் வேதாளம். அஜித் ரசிகர்களின் மனம் கவர்ந்த படங்களில் ஒன்றாக இதில் இருந்து வருகிறது. அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசனும், தங்கையாக லட்சுமிமேனனும் நடித்திருந்தனர். அண்ணன் – தங்கை சென்டிமென்ட்டை வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது ழ் தற்போது இந்த படம் தெலுங்கில் போலோ சங்கர் என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

தெலுங்கு ரீமேக்கில் நடிகர் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்வ, அவருக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். மேலும் சிரஞ்சீவிக்கு ஜோடியாக தமன்னா நடித்திருக்கிறார். இந்த படத்தை மெஹர் ரமேஷ் இயக்கியிருக்கிறார். படம் வருகிற ஆகஸ்ட் 11-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயிலர் படம் பத்தாம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், அதற்கு போட்டியாக வேதாளம் படத்தின் ரீமேக்கை களம் இறக்க இருக்கின்றனர். இந்த படத்தில் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது. அப்போதே அஜித் ரசிகர்கள் பலரும் இது வேதாளம் படம் போலவே இல்லை என்று கமெண்ட் செய்து வந்தனர். இந்த நிலையில் இயக்குனர் மெஹர் ரமேஷ் தற்போது புரமோஷன்காக பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் வேதாளம் படம் க்ரிஞ்ச் படம் என விமர்சித்து இருந்தார்.

வேதாளம் ஒரு க்ரிஞ் படம்.! போலோ ஷங்கர் இயக்குனர் சர்ச்சை பேச்சு.! வெளுத்து வாங்கிய அஜித் ரசிகர்கள்.! 1

மேலும் வேதாளம் படத்தில் அஜித் நடித்ததை விட சிரஞ்சீவியின் நடிப்பு போலோ சங்கர் படத்தில் பன்மடங்கு அதிகமாக இருக்கும் எனவும், வேதாளம் படத்தை விட இந்த படத்திற்கு வித்தியாசமான திரைக்கதையை எழுதி இருப்பதாகவும் அவர் பேசியிருந்தார். இதை கேட்ட பின்பு கொந்தளித்த அஜித் ரசிகர்கள், க்ரிஞ்ச் படத்தை எதற்காக ரீமேக் செய்தாய் என்று கேள்வி எழுப்பியதோடு மெஹர் ரமேஷுக்கு எதிராக சரமாரியாக மீம்ஸ்களையும் பறக்க விட்டனர். இந்த நிலையில் அந்த கண்டனங்களை பார்த்த ரமேஷ் தற்போது ட்விட்டரில் பதிவு ஒன்றை போட்டிருக்கிறார். அதில் 2015 ஆம் ஆண்டு வேதாளம் படத்தை பார்த்தபோது தான் மிகவும் ரசித்ததாகவும், சிறுத்தை சிவாவின் திரைக்கதையில் அண்ணன் தங்கைக்கு இடையே நடக்கும் உணர்ச்சி மிக்க கதையை பார்த்து தான் மிகவும் நெகிழ்ந்ததாகவும் கூறியிருக்கிறார்.

இது மில்லியன் கணக்கான மக்களிடம் பிரதிபலிக்கும் ஓர் உணர்வாக இருந்ததாகவும், அதை தனது தெலுங்கு ரசிகர்களுக்கும் தான் காட்ட விரும்பியதாகவும், 2009 ஆம் ஆண்டு அஜித் நடித்த பில்லாவை பிரபாஸை வைத்து ரீமேக் செய்தேன், தற்போது மீண்டும் அஜித் சாரின் ஆக்சன் என்டர்டைன்மென்ட் படமாக இருக்கும் வேதாளம் படத்தை சிரஞ்சீவியை வைத்து போல சங்கர் ஆக இயக்கியிருக்கிறேன். உலகம் முழுவதும் இது இரண்டு நாட்களில் ரிலீசாக இருக்கிறது. இந்த வாய்ப்புக்கு நன்றி என்று பதிவிட்டு இருக்கிறார். இதை பார்த்த அஜித் ரசிகர்கள் பேசுவதற்கு முன்பு யோசித்துப் பேச வேண்டும் என்று அவருக்கு பதில் கமெண்ட் அளித்து வருகின்றனர்…!

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்