பிக்பாஸ் சீசன் 5-ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டவர்தான் தாமரை. சாமானிய மக்களில் ஒருவராக கிராமத்தில் இருந்து வந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களின் பேராதரவை பெற்ற போட்டியாளர் தான் தாமரை செல்வி. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து, சிறு வயதில் முதல் அடிப்படை தேவைகளுக்கும் அலைந்து திரிந்து படாத கஷ்டப்பட்டு 20 வருடங்களுக்கு மேலாக தெருக்கூத்து நாடகத்தில் நகைச்சுவை நடிகையாக கலக்கி வந்த தாமரை, பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி துளியும் தெரியாமல் அனைவரையும் விட சிறப்பாக விளையாடி மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

இப்படிப்பட்ட குடும்ப சூழலில் வளர்ந்த தாமரையின் அம்மா மற்றும் சகோதர, சகோதரிகளின் குடும்பம் இன்னும் ஏழ்மை நிலையிலேயே உள்ளது. தாமரையின் அம்மா ஒரு சிறு குடிசை வீட்டில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார். மழைக்காலங்களில் பூச்சிகள் வரும் என்பதால் அருகில் உள்ள பள்ளிகள் அல்லது கோவில்களில் சென்று உறங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார் தாமரையின் தாயார். ஒரு பேட்டியின் போது நாடகத்தில் கிடைக்கும் பணத்தை 200 அல்லது 300 ரூபாய் தான் கிடைக்கும் அதை அப்படியே கொண்டு வந்து என்னிடம் கொடுத்துவிடுவார், இன்று வரை அவர்தான் எங்களைப் பார்த்து கொள்கிறார் என்று கண்ணீர் மல்க தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் தாமரை மற்றும் கணவர் இருவரும் பிக்பாஸில் கலந்து கொண்டவர்களை வைத்து பிக்பாஸ் ஜோடிகள் என்று நடன நிகழ்ச்சியை நடத்தி வருகிறது விஜய் டிவி. இதிலும் தனது கணவர் பார்த்திபனுடன் இணைந்து நடனமாடி வருகிறார். தற்போது கடன் வாங்கி தான் பார்த்து பார்த்து கட்டிய வீட்டை சுற்றி காட்டியுள்ளார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..
Youtube Video Code Embed Credits: Lotus Family