படங்கள் தொடர் தோல்வி.! வேறு வழியில்லாமல் இந்த முடிவை எடுத்துள்ள நடிகர் ஜீவா.!

தொடர்ந்து படங்கள் தோல்வியடைந்து வருவதால் ஜீவா அதிரடியாக ஒரு முடிவை எடுத்திருக்கிறார்.பிரபல தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரியின் இளைய மகன்தான் ஜீவா. இவர் 2003 ஆம் ஆண்டு வெளியான ஆசை ஆசையாய் என்ற படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். அதை தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்துள்ளார். அவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் என்று சொன்னால் அது ராம் தான். இந்த படத்தில் சைக்கோ கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். பின்னர் டிஸ்யூம், கற்றது தமிழ், கச்சேரி ஆரம்பம், சிவா மனசுல சக்தி, கோ, நண்பன், என்றென்றும் புன்னகை போன்ற படங்களில் நடித்தார். இந்த படங்களின் மூலமாக சிறந்த நடிகர் என்ற அந்தஸ்தையும் அவர் பெற்றார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

படங்கள் தொடர் தோல்வி.! வேறு வழியில்லாமல் இந்த முடிவை எடுத்துள்ள நடிகர் ஜீவா.! 1

விளம்பரம்

வித்தியாசமான படங்களில் நடித்து வந்த அவர் கமர்சியல் படங்களில் இறங்கியதால் அவருக்கு மவுசு கொஞ்சம் குறைந்தது. இவர் இந்த ஆண்டு தொடக்கத்தில் 83 என்னும் ஹிந்தி திரைப்படத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் இந்த படம் பெரிய அளவில் ஓடவில்லை, கடந்த பத்து வருடங்களாக ஜீவாவுக்கு எந்த ஒரு பெரிய வெற்றி படமும் அமையவில்லை. தற்போது அவர் சுந்தர் சி இயக்கத்தில் காபி வித் காதல் எனும் படத்தில் நடித்து வருகிறார். இதைத்தவிர அவர் வேறு எந்த புது படங்களிலும் நடிப்பதாக தெரியவில்லை. எனவே அவர் ஓடிடி பக்கம் தலை காட்ட தொடங்கி இருக்கிறார்.

தொடர்புடையவை  அம்மா அப்பாவுடன் நடிகை பூஜா ஹெக்டே..! முதல்முறையாக வெளியான குடும்ப புகைப்படம்..!

படங்கள் தொடர் தோல்வி.! வேறு வழியில்லாமல் இந்த முடிவை எடுத்துள்ள நடிகர் ஜீவா.! 3

விளம்பரம்

ஆஹா என்னும் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ள சர்க்கார் வித் ஜீவா என்னும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். இது ஒரு விளையாட்டு நிகழ்ச்சி ஆகும் இதில் பிரபலமான நட்சத்திரங்கள் ஜீவாவை சுற்றி விளையாடுவார்கள். அவர்கள் ஜீவாவை வெல்கிறார்களா அல்லது ஜீவா அவரை வெல்கிறார்களா என்பது தான் இந்த விளையாட்டின் சாராம்சம். இந்த விளையாட்டின் ப்ரோமோ சமீபத்தில் இணையத்தில் வெளியாகி இருக்கிறது நீங்களும் அந்த ப்ரோமோவை காண..Watch the below video..

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Aha Tamil

விளம்பரம்

Leave a Comment