Task-ல் பெண்களை தள்ளிவிட்ட அர்னவ் மற்றும் அருண் பிரசாத்..! காயமடைந்த சௌந்தர்யா..!

ரசிகர்களிடம் மிகவும் பெயர் பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சிக்கு என்று ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு வந்துவிட்டால் போதும் செலிபிரிட்டி ஆகி விடலாம் என்பதால் இந்த நிகழ்ச்சி வாய்ப்புக்காக பலரும் காத்து உள்ளனர். தற்போது தமிழில் 7சீசன்களை கடந்த இந்த நிகழ்ச்சி 8வது சீசனில் அடியெடுத்து வைத்து இருக்கிறது.

Task-ல் பெண்களை தள்ளிவிட்ட அர்னவ் மற்றும் அருண் பிரசாத்..! காயமடைந்த சௌந்தர்யா..! 1

விளம்பரம்

தற்போது இந்த 8வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். நேற்று முதல் இந்த நிகழ்ச்சி ஆரம்பமாகி இருக்கிறது. போட்டியாளர்களாக தீபக், அர்னவ்,ரஞ்சித், ரவீந்தர் சந்திரசேகர், கானா ஜெப்ரி,விஜே விஷால், நான் முத்துக்குமரன்,சத்யா , அருண் பிரசாத், சௌந்தர்யா நஞ்சுந்தன்,சாச்சனா,அன்ஷிதா, சுனிதா , ஜாக்லின்,ஆர்ஜே ஆனந்தி, பவித்ரா ஜனனி, தர்ஷா குப்தா என 18 பேர் கலந்துகொண்டு உள்ளனர்.

Task-ல் பெண்களை தள்ளிவிட்ட அர்னவ் மற்றும் அருண் பிரசாத்..! காயமடைந்த சௌந்தர்யா..! 3

விளம்பரம்

இதில் முதல் ஆளாக சாச்சனா வெளியேறி உள்ளார். இந்நிலையில் இந்த வாரம் தலைவர் அல்லது தலைவி பொறுப்புக்கு போட்டியாளர்களுக்கு போட்டி நடத்தப்பட்டு உள்ளது. ஆண்கள் ஒரு வரிசையில் அவர்களுக்கு எதிராக பெண்கள் ஒருவரிசையில் நின்று கொண்டு,அலாரம் சத்தம் கேட்கவும், அவர்கள் விரைந்து கடந்து சீர்களில் அமர வேண்டும். இந்த போட்டியின் பொது எதிரே வந்த பெண்கள் மீது அர்னவ் மற்றும் அருண் பிரசாத் பயங்கரமாக மோதி உள்ளனர்.

விளம்பரம்

Leave a Comment