விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். தமிழில் மட்டுமில்லாமல் இந்தியாவில் உள்ள பல்வேறு மொழிகளிலும் பிக் பாஸ் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழ் இதுவரை 7 சீசன்களை வெற்றிகரமாக கடந்து இருக்கிறது பிக் பாஸ். இந்த 7 சீசன்களையும் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி அசத்தி இருந்தார். தற்போது 8வது சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த சீசன் விரைவில் தொடங்க உள்ளது. ஆனால் இந்தமுறை நிகழ்ச்சியை உலகநாயகன் தொகுத்து வழங்கவில்லை,ஒப்பந்தமாகி இருக்கும் படங்களில் பிசியாக இருப்பதால் அதனை முடிக்க வேண்டும் என்பதற்காக பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி உள்ளார். இது இவரின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி கொடுத்து இருந்தது.
இந்நிலையில் இந்த சீசனை தற்போது நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருக்கிறார். இதுகுறித்து அதிகார்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. தற்போது இந்த பிக் பாஸ் சீசன் 8 தொடரின் புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது . இந்த ப்ரோமோ ரசிகர்களை அதிகளவு கவர்ந்து இருக்கிறது.
Embed Video Credits : VIJAY TELEVISION