தமிழ் சினிமாவுக்கு இசையமைப்பாளராக அறிமுகமாகியவர் ஹிப் ஹாப் ஆதி. இவரின் இசைக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது. பல வெற்றி பாடல்களையும் தமிழ் சினிமாவில் கொடுத்து உள்ளார். இவரின் ஆல்பம் சாங்கிற்கு ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இசையமைப்பாளராக இருந்த ஹிப் ஹாப் ஆதி மீசையை முறுக்கு படத்தினை இயக்கி நடித்து ஒரே நேரத்தில் இயக்குனர் மற்றும் நடிகர் அவதாரத்தினை எடுத்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நல்ல கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து ஹிப் ஹாப் ஆதி நடித்து வருகிறார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான பிடி சார் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. இப்படத்தினை தொடர்ந்து ஹிப் ஹாப் ஆதி தற்போது கடைசி உலக போர் படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தினை ஹிப் ஹாப் ஆதியே இயக்கி இசையும் அமைத்து உள்ளார்.

முழுக்க முழுக்க ஹிப் ஹாப் ஆதி இயக்கத்தில் வெளியாக இருக்கும் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது. இப்படம் வருகிற செப்டம்பர் 20ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. தற்போது இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டு உள்ளது. ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. ரசிகர்கள் படத்திற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Embed Video Credits : THINK MUSIC SOUTH