பா.ரஞ்சித் அறிமுகமான முதல் படம் முதலே தனக்கென ஒரு தனியான பாதையை தமிழ் சினிமாவில் உருவாக்கிக்கொண்டுள்ளார். அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, சார்பேட்டா பரம்பரை என தனித்துவமான தெரிந்த கதைகளில் திரையில் பெரிதாக சொல்லப்படாத மக்களின் கதையை மிகவும் அழுத்தம் திருத்தமாக கூறி வருகிறார். video given below

இப்பொது வேட்டுவம், நட்சத்திரங்கள் நகர்கிறது போன்ற படங்களை இயக்கி வரும் இவர் அடுத்து நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகவுள்ள விக்ரமின் 61வது படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கவுள்ளார். இந்த படத்தின் அறிவிப்பு முன்னரே வெளியாகிருந்தாலும், இப்பொது அதிகாரபூர்வமாக பூஜை போட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விக்ரம் எப்போதும் தனித்துவமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஆரம்பக்கால முதலே சேது, பிதாமகன், காசி, அந்நியன், ஐ போன்ற தனித்துவமான நடிப்பிற்கு தீனி போடும் படங்களில் நடித்து வருகிறார். இவரும் ரஞ்சித்தும் இணைகிறார்கள் என்ற அறிவிப்பே தமிழ் திரை ரசிகர்களை இந்த படத்தின் ஒரு கவனத்தை உண்டாகியுள்ளது.

இது குறித்து பேசிய பா.ரஞ்சித், “இது ஒரு மிக பெரிய படம், 19th century’ல கே.ஜி.எஃப்’ல நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படியாக கொண்டு இந்த படம் தயாராகவுள்ளது. குறிப்பாக சீயான் விக்ரம் நன்றாக நடிக்கக்கூடியவர் அவருக்கு நல்ல தீனி போடும் கதாபாத்திரமே மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெறுகிற படமா இது அமையும்” என கூறியுள்ளார்.

இந்த விழாவில் நடிகர் விக்ரம், இயக்குனர் பா.ரஞ்சித், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், நடிகர் சிவகுமார் போன்றோர் கலந்து கொண்டனர். ரெகுலர் படப்பிடிப்பு விரைவில் துவங்கப்படவுள்ளது. இந்த ஆண்டில் நடிகர் விக்ரமின் நடிப்பில் அஜய் ஞானமுத்துவின் “கோப்ரா” மற்றும் மணிரத்னத்தின் “பொன்னியின் செல்வன் 1” போன்ற படங்கள் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Video Courtesy – CineUlagam.