பிக்பாஸ் ஆயிஷாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதா? ஆயிஷா பகிர்ந்த புகைப்படத்தால் கேள்வி எழுப்பும் ரசிகர்கள்.!

வெளியிட்டது

இரண்டு நாட்களுக்கு முன்பு தனது காதலரை அறிமுகப்படுத்தி இருந்தார் பிக்பாஸ் பிரபலம் ஆயிஷா. தொடர்ந்து அவருடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார். விஜய் தொலைக்காட்சியில் “பொன்மகள் வந்தாள்” என்கிற சீரியல் மூலமாக அறிமுகமானவர் நடிகை ஆயிஷா. இவர் அதற்கு முன்பாக டிக் டாக் செயலியில் வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

பிக்பாஸ் ஆயிஷாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதா? ஆயிஷா பகிர்ந்த புகைப்படத்தால் கேள்வி எழுப்பும் ரசிகர்கள்.! 1

பின்னர் இவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவே அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு விஜய் டிவியில் காலடி எடுத்து வைத்தார். ஆனால் சீரியலில் நுழைந்த சில நாட்களிலேயே இயக்குனருக்கும் அவருக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால் அந்த சீரியலில் இருந்து அதிரடியாக விலகினார் ஆயிஷா. பின்னர் சன் டிவிக்கு சென்ற அவர், அங்கு மாயா என்கிற சீரியலில் நடித்தார்.

பின்னர் ஜீ தமிழில் ஒளிபரப்பான சத்யா சீரியலில் நடித்து வந்தார். இந்த சீரியல் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதில் ரவுடி பேபி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார் ஆயிஷா. இந்த சீரியலின் ஹீரோவாக நடிகர் விஷ்ணு நடித்து கொண்டிருந்தார். விஷ்ணுவும் ஆயிஷாவும் காதலித்து வருவதாக பலரும் வதந்திகளை கிளப்பி விட்டிருந்தனர். ஆனால் இந்த தகவலை ஆயிஷா மறுத்தார்.

மேலும் ஆயிஷா யோகேஸ்வரன் என்பவரை காதலித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. சத்யா சீரியல் இரண்டாம் பாகம் முடிந்த கையுடன் அவருக்கு பிக் பாஸ் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் சீசன் 6ல் 21 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று இருந்தார்.

60 நாட்களுக்கு மேல் சிறப்பாக விளையாடி வந்த ஆயிஷா குறைந்த வாக்குகள் பெற்று ஒரு நாள் போட்டியில் இருந்து வெளியேறினார்.


பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போது விரைவில் அனைவர்க்கும் பிரியாணி விருந்து என்று கூறிவிட்டு சென்றார். விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதை தான் இப்படி மறைமுகமாக கூறுகிறார் என்று பலரும் கூறி வந்தனர். இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு காதலர் தினத்தன்று தனது காதலர் யோகேஷை அறிமுகம் செய்து வைத்து சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு இருந்தார் ஆயிஷா.

இந்த நிலையில் இன்று மோதிரம் அணிந்து இருக்கும் கைகளை பிடித்து இருப்பது போன்ற புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். மேலும் யோகேஷுடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களையும் பகிர்ந்து இருப்பதால் இருவரும் திருமண நிச்சயதார்த்தம் செய்துவிட்டார்களா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்