இன்று சூர்ய உதயம் அழகாக இருந்தது.! சூர்யா குறித்து தமிழில் ட்வீட் செய்த சச்சின்.! என்ன சொல்லிருக்காருனு பாருங்க

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் சூர்யா என்ற திடீரென சச்சினை நேரில் சந்தித்து பேசி இருக்கிறார். அந்த புகைப்படத்தை அவரே தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். தமிழ் திரை உலகின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது தனது 42 வது படத்தில் நடித்து வருகிறார். இவர் பிரபல நடிகர் சிவகுமாரின் மூத்த மகன் ஆவார். சரவணன் என்கிற இயற்பெயர் கொண்ட இவர் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த நேருக்கு நேர் என்கிற படத்தில் மூலமாக அறிமுகமானார். அன்று தொடங்கி இன்று வரை சுமார் 41 படங்களின் நடித்து முடித்திருக்கிறார். இவர் நடிப்பில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய படங்களாக நந்தா, காக்க காக்க, பேரழகன், வாரணம் ஆயிரம், ஏழாம் அறிவு, அயன், சிங்கம், மாற்றான், அஞ்சான் போன்ற படங்களாகும். இவர் நடிப்பில் கடைசியாக வெளியாகி தேசிய விருது பெற்ற படம் சூரரைப் போற்று. அதன் பின்னர் ஜெய் பீம் என்கிற படத்தில் நடித்த பலரின் உள்ளங்களை வெற்றி பெற்றார் நடிகர் சூர்யா.

தொடர்புடையவை  "So Beautiful, So Elegant, Looking Like a Wow" தளபதி விஜய் அம்மா ஷோபாவின் Cute ரீல்ஸ் வீடியோ..!

இன்று சூர்ய உதயம் அழகாக இருந்தது.! சூர்யா குறித்து தமிழில் ட்வீட் செய்த சச்சின்.! என்ன சொல்லிருக்காருனு பாருங்க 1
தற்போது இவர் 42வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் தற்காலத்தில் நடக்கும் காட்சிகளும் வரலாற்றில் நடக்கும் காட்சிகளும் இரண்டு விதமாக இந்த படம் உருவாகி வருவதாக தெரிகிறது. இந்த படத்திற்காக தீவிரமாக உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக மாற்றி வருகிறார் சூர்யா. அந்த வீடியோக்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகியிருந்தது. சூர்யா பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து வந்தார். அந்த படத்தில் இருந்து தற்போது விலகி விட்டார். கைவசம் தனது 42வது படத்தை மட்டுமே வைத்திருக்கிறார். நடிப்பது மட்டுமின்றி தயாரிப்பது, நிகழ்ச்சி தொகுப்பாளராக இருப்பது என்று பன்முகத் தலைமையாளராக வலம் வருகிறார் நடிகர் சூர்யா. இந்த நிலையில் நேற்று அவர் சச்சின் டெண்டுல்கரை சந்தித்து இருக்கிறார்.

விளம்பரம்

இன்று சூர்ய உதயம் அழகாக இருந்தது.! சூர்யா குறித்து தமிழில் ட்வீட் செய்த சச்சின்.! என்ன சொல்லிருக்காருனு பாருங்க 3

மும்பையில் எந்தவித திட்டம் இல்லாமலும் சச்சின் டெண்டுல்கரை சந்தித்திருக்கிறார் சூர்யா. அந்த புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்த அவர் மதிப்பும் அன்பும் என்று பதிவிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. நடிகர் சூர்யா கிரிக்கெட் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். கிரிக்கெட் வீரர்கள் தற்போது படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். எடுத்துக்காட்டாக தோனி தோனி என்டடைன்மன்ட் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி ஹரிஷ் கல்யாணை வைத்து ஒரு படத்தை தயாரித்து வருகிறார். அந்த வகையில் இந்த சந்திப்பும் அது போன்ற ஒரு சந்திப்போ என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். மேலும் 2டி என்டர்டைன்மென்ட் என்கிற ஒரு தயாரிப்பு நிறுவனத்தை சூர்யா நடத்தி வருவதால் சச்சின் படத்தில் ஏதும் நடிக்க இந்த சந்திப்பு நிகழ்ந்ததா? என்றும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் சூர்யாவின் சந்திப்பு குறித்து தற்போது தமிழில் ட்வீட் செய்து இருக்கிறார் சச்சின்.

விளம்பரம்
தொடர்புடையவை  அவர்ட்ட எதோ இருக்கு..நித்தியானந்தாவை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படும் பிரியா ஆனந்த்

இன்று சூர்ய உதயம் அழகாக இருந்தது.! சூர்யா குறித்து தமிழில் ட்வீட் செய்த சச்சின்.! என்ன சொல்லிருக்காருனு பாருங்க 5

அதில் அவர் இன்று காலை சூரிய உதயம் விசேஷமாக இருந்தது. உங்களை சந்தித்தது அற்புதமாக இருந்தது. மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று சொல்லி சூர்யாவை டேக் செய்து அந்த பதிவை போட்டிருக்கிறார் இந்த பதிவுகளுக்கு லைக்கள் குவிந்து வருகிறது.!

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment