அவர்ட்ட எதோ இருக்கு..நித்தியானந்தாவை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படும் பிரியா ஆனந்த்

தனக்கு நித்தியானந்தாவை திருமணம் செய்து கொள்ள ஆசை இருப்பதாக நடிகை பிரியா ஆனந்த் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் வாமனன் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனவர் பிரியா ஆனந்த். முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற படங்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. கன்னட சூப்பர் ஸ்டார் மறைந்த புனித் குமாரின் கடைசி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து இருந்தார். தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அவர் நடித்திருந்த எதிர்நீச்சல் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து அவருக்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வணக்கம் சென்னை, அரிமா நம்பி, இரும்பு குதிரை, எல்கேஜி போன்ற படங்களில் நடித்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அவர்ட்ட எதோ இருக்கு..நித்தியானந்தாவை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படும் பிரியா ஆனந்த் 1

விளம்பரம்

தற்போது அந்தகன், சுமோ, காசேதான் கடவுளடா போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார் பிரியா ஆனந்த். சுமோ படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில் அவரின் பேட்டி ஒன்று சமூக வரைத்தளங்களில் வைராலகி வருகிறது. அதில் அவர் பாலியல் வழக்கில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளியான நித்தியானந்தாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறியுள்ளார். தமிழ்நாட்டில் பிரபல சாமியராக இருந்தவர் நித்தியானந்தா, இவர் பாலியல் வழக்கில் சிக்கியதால் நாட்டை விட்டு ஓடி வெளிநாட்டில் ஒரு தனித்தீவையே விலைக்கு வாங்கியுள்ளார். அதற்கு கைலாசா எனப்பெயரிட்டு அங்கு வாழ்ந்து வருகிறார். அவரை பிடிக்க முடியாமல் இந்திய அரசாங்கம் திணறி வருகிறது. ஆனாலும் தினமும் ஏதாவது ஒரு வீடியோவை வெளியிட்டு பிரசங்கம் செய்து வருகிறார் நித்தி.

தொடர்புடையவை  கணவர் Vignesh sivan பிறந்தநாளை கொண்டாடிய நடிகை Nayanthara..! வெளியான ரொமேன்டிக் புகைப்படங்கள்..!

அவர்ட்ட எதோ இருக்கு..நித்தியானந்தாவை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படும் பிரியா ஆனந்த் 3

விளம்பரம்

இந்த நிலையில் பிரியா ஆனந்த் நித்தியை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார். ஒரு பேட்டியில் பேசிய அவர், நித்தியானந்தாவை எனக்கு மிகவும் பிடிக்கும், அவரை திருமணம் செய்து கொண்டால் என் பெயருக்குப் பின்னால் இருக்கும் ஆனந்தை மாற்ற தேவையில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் நித்தியானந்தாவுக்கு மக்களை ஈர்க்கத் தெரியும், இவ்வளவு பேர் பின் தொடர்கிறார்கள் என்றால் அவரிடம் ஏதோ இருக்கு என்றும் கூறியுள்ளார். மாதம் ஒருமுறையாவது நித்தியானந்தா பற்றி இன்ஸ்டா பக்கத்தில் கருத்து பதிவிடுவார் பிரியா. இன்று ஒரு படி மேலே போய் அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறியிருப்பதை நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து வருகின்றனர். அவரின் பேட்டியை நீங்களும் காண.. Watch the below video..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Ahmed Meeran Vlogs

விளம்பரம்

Leave a Comment