பிக்பாஸ் தனலக்ஷ்மிக்கு என்ன ஆச்சு.? கண்ணீருடன் அவர் வெளியிட்ட வீடியோவால் பதறிய ரசிகர்கள்

வெளியிட்டது

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமான தனலட்சுமி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் அதில் அவர், “வாழ்க்கையின் கடைசி நிகழ்வு இறப்பு தான், ஓம் நமச்சிவாயா” என்று பதிவிட்டு இருந்தார். தற்போது அந்த கேப்ஷனை எடிட் செய்து “ஓம் நமச்சிவாயா” என்று மட்டுமே பதிவிட்டிருக்கிறார்.

பிக்பாஸ் தனலக்ஷ்மிக்கு என்ன ஆச்சு.? கண்ணீருடன் அவர் வெளியிட்ட வீடியோவால் பதறிய ரசிகர்கள் 1

இதனால் தனலட்சுமிக்கு என்ன ஆனது? என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். பிக் பாஸ் சீசன் 6ல் முன்பு எப்போதும் போல் இல்லாத அளவிற்கு பொதுமக்களில் இருந்து ஒருவரையும் போட்டியாளராக தேர்ந்தெடுத்திருந்தனர். அப்படி உள்ளே வந்தவர் தான் தனலட்சுமி.

டிக்டாக் வீடியோக்களை செய்து வந்த இவர் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் 77 நாட்கள் தாக்குப்பிடித்து இருந்தார். அதன் பின்னர் வெளியேறிய அவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு எதுவுமே கிடைக்கவில்லை. தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் மட்டுமே பகிர்ந்து வந்தார்.

 

இந்த நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புது வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். கண்ணீருடன் அமர்ந்திருக்கும் அவர் சோகமான பாட்டை பின்னணியில் ஒலிக்கவிட்டு “வாழ்க்கையின் கடைசி நிகழ்வு இறப்புத்தான், ஓம் நமச்சிவாயா” என்று பதிவிட்டு இருந்தார்.


அவரின் இந்தப் பதிவை பார்த்த பலரும் என்ன ஆனது சொல்லுங்கள்? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் மேலும் தனலட்சுமிக்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல்களையும் கூறி வருகின்றனர். பதிவிட்ட அரை மணி நேரத்தில் “வாழ்க்கையின் கடைசி நிகழ்வு மரணம்” என்கிற வசனத்தை மட்டும் நீக்கி விட்டு” ஓம் நமச்சிவாயா” என்று மட்டும் பதிவிட்டு இருக்கிறார்.

எதற்காக அழுது கொண்டே மரணம் குறித்து தற்போது பதிவிடுகிறார்? எதற்காக அழுகிறார்? என்பது எதுவுமே தெரியாமல் அவரது ரசிகர்கள் கமெண்ட்களில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு தனலட்சுமி விளக்கம் அளிப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்