பிக்பாஸ் காட்டிய ஒரு வீடியோவால் மைனா நந்தினி கதறி அழுது இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்கிற தொடரில் மைனா கதாபாத்திரத்தில் நடித்தவர் நந்தினி. மதுரையில் பிறந்து வளர்ந்த இவர் பல தடைகளைத் தாண்டி சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆர்வத்தால் படங்களில் நடிக்க தொடங்கினார். தற்போது மைனாவிற்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது. சமீபத்தில் வெளியாகிய 500 கோடி வசூலை குவித்த விக்ரம் படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதிக்கு ஜோடியாக 3 மனைவிகளில் ஒருவராக மைனா நடித்திருந்தார். மேலும் விருமன் படத்திலும் அவர் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வருகிறார் மைனா. இந்த நிலையில் மைனாவுக்கு பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. 20 போட்டியாளர்களை கொண்டு பிக்பாஸ் சீசன் 6 ஆரம்பிக்கப்பட்டது. மைனா ஒரு வாரத்திற்கு பிறகு தான் உள்ளே சென்றார். வெளியே பார்த்த மைனாவிற்கும், பிக்பாஸ் உள்ளே இருக்கும் மைனாவிற்கும், பல வித்தியாசம் இருக்கிறது. மைனா மற்ற போட்டியாளர்களிடம் சற்று கடுமையான முறையில் நடந்து கொள்கிறார். மகேஸ்வரி உடன் சேர்ந்து கொண்டு அவர் இவ்வாறு செய்கிறார் என்று மைனா மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்ததுள்ளது.
மேலும் ஒரு குரூப்பை உருவாக்கி அதற்கு தலைவி போல் மைனா செயல்படுகிறார் என்றும் மைனா மீது குற்றச்சாட்டுகளை நெட்டிசன்கள் முன்வைத்து வருகின்றனர்.இந்த நிலையில் நேற்று மைனாவின் திருமண நாள். இதற்காக மைனாவின் கணவர் யோகி மற்றும் அவரது மகன் துருவ் பேசும் காணொளியை பிக்பாஸ் பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த மைனா கதறி கதறி அழுதார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண.!