அறிமுக இயக்குனர்கள் ஹரி மற்றும் ஹரீஷ் ஆகியோர் இயக்கத்தில் முன்னணி நடிகை சமந்தா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் யசோதா. இந்த திரைப்படத்திற்கு பலரும் நல்ல வரவேற்பை கொடுத்து வரும் நிலையில் ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார். வாடகைத்தாய் முறையில் ஒரு பெண் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து இந்த படத்தை இயக்கியிருந்தனர் .தனது தங்கையின் பண தேவைக்காக வாடகை தாயாக மாறுகிறார் சமந்தா. இதற்காக அவர் வாடகை தாய்கள் இருக்கும் மருத்துவமனை ஒன்றை அணுகுகிறார். அங்கு அவரைப் போலவே பல வாடகை தாய்கள் இருக்கிறார்கள். பின்னர் ஒரு கட்டத்தில் அவருக்கு பல அதிர்ச்சி தரும் விஷயங்கள் அங்கு நடப்பது தெரிய வருகிறது. அதன் பின்னர் என்ன ஆனது என்பதுதான் படத்தின் மீதி கதை.

இந்தப் படம் நேற்று வெளியானது. தமிழகத்தில் ரெட் அலர்ட் புயல் எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கும் நிலையிலும், மழை பெய்த போதிலும் சமந்தாவின் படத்தை பார்ப்பதற்காக தியேட்டருக்கு கூட்டம் கூடியது. தனி ஒரு பெண்ணாக இருந்து மொத்த படத்தையும் தூக்கி நிறுத்தி இருந்தார் சமந்தா. புது முக இயக்குனர்களாக இருந்த போதும் கதையை மிக நேர்த்தியாக செலுத்தியிருந்தார்கள். படத்தில் சமந்தா போடும் சண்டைக் காட்சிகள் எல்லாம் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இருந்ததாக வெளியில் வந்த பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் ப்ளூ சட்டை மாறன் சில நெகட்டிவ் விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார்.

படத்தின் கதை நன்றாக இருந்த போதும் பல குழப்பங்கள் இருந்தது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் ஒரு லட்சம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை காப்பி அடித்து எடுக்கப்பட்ட போக்கிரி படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் போல இருந்தது. என கடுமையான விமர்சனத்தை முன் வைத்தார். திரைக்கதையை சரியாக எடுக்காமல் மொக்கை மொக்கையாக எடுத்து படத்தை காலி செய்து விட்டனர். Watch the Below Video..!
Youtube Video Code Embed Credits: Tamil Talkies