Categories: சினிமா

வாரிசு ஆடியோ லாஞ்ச் தேதியை அறிவித்துவிட்டு டெலீட் செய்த பிக்பாஸ் ராஜு.! ஆடியோ லாஞ்ச் எப்போ தெரியுமா?

வெளியிட்டது

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தற்போது பிக்பாஸ் புகழ் ராஜு ஜெயமோகன் தனது twitter பக்கத்தில் தெரிவித்துவிட்டு, தற்போது அதை டெலிட்டும் செய்திருக்கிறார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய் தனது 66-வது படமான வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த மாதம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்தப் படம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறது. தெலுங்கில் வெளியாவதில் ஏற்கனவே பிரச்சனை இருந்து வருகிறது. பொங்கல் பண்டிகைகளின் போது தெலுங்கில் உருவாகும் படங்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்ததால் அங்கிருந்து பிரச்சினை தொடங்கியது. தற்போது இந்த பிரச்சனை தற்போது முடிவடைந்துள்ளது.

வாரிசு ஆடியோ லாஞ்ச் தேதியை அறிவித்துவிட்டு டெலீட் செய்த பிக்பாஸ் ராஜு.! ஆடியோ லாஞ்ச் எப்போ தெரியுமா? 1
தற்போது வாரிசு படத்திற்கு இரண்டாவது பிரச்சனை உருவாகி உள்ளது. தமிழகத்திலும் வாரிசு திரைப்படத்திற்கு குறைவான திரையரங்குகள் தான் ஒதுக்கப்பட்டிருப்பதாக இந்த படத்தை தயாரித்திருக்கும் தயாரிப்பாளர் தில்ராஜு சமீப காலமாக பேட்டி அளித்து வருகிறார். துணிவு படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கியிருப்பதால், பல தியேட்டர்கள் ஓனர்கள் அந்தப் படத்திற்கு தான் முக்கியத்துவம் கொடுப்பதாகவும் வாரிசு படத்திற்கு திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இதையடுத்து சென்னை, செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட நகரங்களில் மட்டும் வாரிசு திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரசிகர்கள் வாரிசு திரைப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 5 வெற்றியாளர் ராஜு ஜெயமோகன் ட்விட்டரில் பதிவு ஒன்றை போட்டிருந்தார். அதில் தளபதி விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் ஆடியோ லான்ச் வருகின்ற டிசம்பர் 24ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும், அதை தாம் தான் தொகுத்து வழங்க இருப்பதாகவும் ஆர்வக்கோளாறில் ராஜு ஜெயமோகன் ட்வீட் ஒன்றை போட்டிருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ஷேர் செய்ய தொடங்கினர். பின்னர் அவசர அவசரமாக அந்த ட்வீட்டை டெலிட் செய்திருக்கிறார். அதற்கு முக்கிய காரணம் படக்குழுவே இன்னும் அதிகாரப்பூர்வமாக இசை வெளியீட்டு விழாவை அறிவிக்காத நிலையில், நிகழ்ச்சி தொகுப்பாளராக தேர்வான உடனேயே ஆர்வக்கோளாறில் ராஜு இப்படி செய்துவிட்டார், அதை அவர் டெலிட் செய்து விட்டு மன்னிப்பும் கோரி இருக்கிறார். அந்த தகவல் தற்போது இணையத்தில் வேகமாக வைரல் ஆகி வருகிறது.!

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்