நடிகையுடன் ஏற்பட்ட காதல்.! காதலியை அறிமுகம் செய்து வைத்த பிக்பாஸ் ராம் ராமசாமி.!

வெளியிட்டது

பிக்பாஸ் சீசன் 6-ல் முக்கிய போட்டியாளராக இருந்த ராம் ராமசாமி தற்போது தனது காதலியை அறிமுகப்படுத்தி இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் பகிர்ந்திருக்கும் அவர் தனது காதலியை க்யூட்டாக தற்போது அறிமுகப்படுத்தி இருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் சீசன் சிக்ஸில் ஒரு முக்கிய போட்டியாளராக இருந்து வந்தவர் ராம் ராம ராமசாமி. இவர் கிரிக்கெட் வீரராக தனது வாழ்க்கையை தொடங்கியவர். பின்னர் அவருக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கிரிக்கெட்டில் அவரால் தொடர்ந்து இயங்க முடியவில்லை. எனவே அவர் திரைத்துறையில் நடிக்கும் முடிவை எடுத்து திரைத்துறை பக்கம் தன் கவனத்தை செலுத்தினார். ஆனால் பெரிய அளவில் ஏதும் வாய்ப்புகள் கிடைக்காத அவருக்கு பிக்பாஸ் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. எனவே அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு சீசன் சிக்ஸில் கலந்து கொண்டார்.

நடிகையுடன் ஏற்பட்ட காதல்.! காதலியை அறிமுகம் செய்து வைத்த பிக்பாஸ் ராம் ராமசாமி.! 1

ஆரம்பம் முதலே அமைதியான போட்டியாளராக இருந்து வந்த ராம் ராமசாமிக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். விளையாட்டை விளையாடாத இவரை உள்ளே வைத்திருப்பதாக பலரும் பிக் பாஸ் மீது குற்றம் சாட்டினர். உண்மையில் அவருக்கு வந்த நாளிலிருந்து கண்களில் ஏதோ பூச்சி கடித்து வீங்கிய நிலையில் இருந்த காரணத்தினால் அவரால் தன்னை நிரூபித்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. ஓய்வெடுத்துக் கொண்டே இருக்கிறார் என்ற குற்றச்சாட்டை பின்னர் அவர் மாற்றி அடுத்தடுத்த வாரங்களில் நன்றாக விளையாடத் தொடங்கினார். ஆனால் எதிர்பாராத விதமாக ராம் ராமசாமியை பிக் பாஸிலிருந்து மக்கள் வெளியே அனுப்பி இருந்தனர். ஆனால் இப்போதுதான் ராம் ராமசாமி தனது விளையாட்டையே தொடங்கியிருந்தார் அதற்குள் இப்படி அவரை வெளியே அனுப்பி விட்டீர்களே என்று பலரும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தனர்.

வெளியே வந்த பின்னர் ஏடிகே விக்ரமனுடன் சேர்ந்து சில வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வந்த ராம் ராமசாமி தற்போது தனது காதலியை முதல்முறையாக அறிமுகப்படுத்தி இருக்கிறார்.்ராஷி பிரபா என்னும் திரைத் துறையைச் சேர்ந்த மாடலுடன் அவருக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. ராஷிபிராபா சந்தீப்பனி இலங்கையைச் சேர்ந்த ஒரு மாடல் ஆவார். தற்போது அவர் கொழும்புவில் வசித்து வருகிறார். சினிமாத் துறையில் இருக்கும் இவருக்கு தற்போது ராம் ராமசாமி உடன் காதல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, “நீ இல்லாமல் நான் மட்டும் என்ன செய்வேன், எங்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள 28ஆம் தேதி ஜூலை வரை காத்திருங்கள்” என்று பதிவிட்டு இருக்கிறார். பலரும் இந்த ஜோடிகளுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்