சஞ்சீவின் 34வது பிறந்தநாள்.! வந்து குவிந்த சன் டிவி மற்றும் விஜய் டிவி பிரபலங்கள்.! முழு வீடியோ இதோ.!

கயல் சீரியலில் எழில் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சஞ்சீவுக்கு தற்போது 34-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டிருக்கிறது. வீட்டில் மொட்டை மாடியில் வைத்து எளிமையாக நடந்த அந்த பிறந்தநாள் பார்ட்டியில் சின்னத்திரை இயக்குனர்கள் பிரவீன் பென்னட் உட்பட பலர் கலந்து கொண்டு இருக்கின்றனர். அந்த வீடியோவை தற்போது ஆலியா மானசா சங்கு சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். விஜய் தொலைக்காட்சியின் ராஜா ராணி என்கிற சீரியலின் மூலமாக சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகர் சஞ்சீவ். இவர் அதற்கு முன்பு குளிர் 100 டிகிரி என்கிற படத்தில் நடித்திருக்கிறார். ஆனால் அந்த படம் கொடுக்காத பிரபலத்தை இவருக்கு சின்னத்திரை வாரி வழங்கியது. முதல் சீரியலிலேயே நல்ல நடிப்பை வெளிப்படுத்தியதால் இவருக்கு அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காற்றின் மொழி என்கிற சீரியலில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சஞ்சீவின் 34வது பிறந்தநாள்.! வந்து குவிந்த சன் டிவி மற்றும் விஜய் டிவி பிரபலங்கள்.! முழு வீடியோ இதோ.! 1

விளம்பரம்

 

பின்னர் அந்த சீரியலும் ஒரு கட்டத்தில் நிறைவடைந்த நிலையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கயல் என்கிற சீரியலில் நடிக்கும் வாய்ப்பு சஞ்சீவுக்கு கிடைத்தது. இந்த சீரியலில் கயலுக்கு ஜோடியாக எழில் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார் சஞ்சீவ். இவர் ராஜா ராணி தொடரில் நடித்துக் கொண்டிருந்தபோதே அதில் ஹீரோயினாக நடித்து வந்த ஆலியா மானசாவுடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அந்த தம்பதிகளுக்கு ஐலா மற்றும் அர்ஷ் என்கிற இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் இந்த தம்பதிகள் ஏதாவது ஒரு வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக பிறந்தநாள் பார்ட்டி என்றால் இவர்கள் வீடியோவை எடுத்து அதை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  பிரிந்து சென்ற மகனின் 21வது பிறந்தநாளுக்காக வாழ்த்திய வனிதா..தாயின் நெகிழ்ச்சி | Vanitha

சஞ்சீவின் 34வது பிறந்தநாள்.! வந்து குவிந்த சன் டிவி மற்றும் விஜய் டிவி பிரபலங்கள்.! முழு வீடியோ இதோ.! 3
இந்த நிலையில் தற்போது சஞ்சீவின் 34-வது பிறந்தநாளுக்கு மொட்டை மாடியில் வைத்து எளிமையாக ஏற்பாடுகளை செய்திருக்கிறார் ஆல்யா. அந்த நிகழ்ச்சிக்கு சன் டிவி பிரபலங்கள் உட்பட பலரும் வருகை புரிந்து இருக்கின்றனர். மகிழ்ச்சியில் பல பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டு பின்னர் கேக் வெட்டியும் இருக்கிறார் சஞ்சீவ். அதை ஒரு வீடியோவாக எடுத்து தற்போது அவர்கள் தங்களது youtube பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றனர். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Sanjiv & alya

விளம்பரம்

Leave a Comment