திடீரென விவகாரத்தை அறிவித்த தமிழ் பிக்பாஸ் பிரபலம்.! 6 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாக அறிவிப்பு

வெளியிட்டது

சமீப காலமாக திரைத்துறையில் விவாகரத்து பெறுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பல வருடங்ளாக காதலித்து திருமணம் செய்து கொண்டவர்களே, விவாகரத்தை அறிவித்து வருகின்றனர். பொதுவாகவே சினிமாவில் இருப்பவர்கள் பலரும் திருமணம் ஆன சில நாட்களிலேயே விவாகரத்தை அறிவித்து வருகின்றனர். சமீபத்தில் இயக்குனர் விஜய் – அமலா பால், தனுஷ் – ஐஸ்வர்யா போன்றவர்கள் விவாகரத்து பட்டியலில் இணைந்திருந்தார்கள். இந்த வகையில் தற்போது பிக்பாஸில் கலந்து கொண்ட பிரபலம் ஒருவரும் தன்னுடைய விவாகரத்தை அறிவித்துள்ளார். விவாகரத்து செய்த போதிலும் தானும் தன்னுடைய கணவரும் நல்ல நண்பர்களாக தொடர்வோம் என்றும் அவர் அறிவித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ஒரு ரியாலிட்டி ஷோ தான் பிக்பாஸ் இதில் பங்கேற்ற பலரும் தற்போது சினிமா வாய்ப்பு கிடைத்து படங்களில் நடித்து வருகின்றனர்.

திடீரென விவகாரத்தை அறிவித்த தமிழ் பிக்பாஸ் பிரபலம்.! 6 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாக அறிவிப்பு 1

பிக்பாஸ் 2 வில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் ஆர் ஜே வைஷ்ணவி. ஆர் ஜே வாக பணியாற்றிக் கொண்டிருந்த அவருக்கு பிக்பாஸில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ்க்கு பின்னர் அவர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இந்த நிலையில் அவர் தனது நீண்ட நாள் காதலான அஞ்சன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அஞ்சன் பைலட்டாக வேலை பார்த்து வருகிறார். அவரும் ஆர்ஜே வைஷ்ணவியும் பல வருடங்களாக காதலித்து வருகின்றனர். அவ்வபோது அவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தனர். ஜிம்முக்கு செல்வது, அவுட்டிங் செல்வது என்று இருவரும் ஒன்றாகவே இருந்து வந்தனர். இடையில் இருவரும் திருமணமும் செய்து கொண்டனர். 6 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் தற்போது பிரிவதாக அறிவித்துள்ளனர்.

வைஷ்ணவி தனது ட்விட்டர் பக்கத்தில் நீண்ட விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறார். அதில் தன்னுடைய ஆறு வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாக அவர் அறிவித்துள்ளார். மோசமான எதுவும் நடக்கவில்லை என்றாலும், நாங்கள் இருவரும் நண்பர்களாகவே தொடர்வோம். இந்த முடிவு சரியானதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அவர் பதிவிட்டு இருக்கிறார். எங்களுக்காக யாரும் வருத்தப்படாதீர்கள், எங்களுடைய சூழ்நிலை தற்போது சரியாக இல்லை. அதனாலேயே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார். நாங்கள் பிரிந்து விட்டாலும் அவருக்காக என் மனதில் எப்போதும் இடம் இருக்கும் என்றும் அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தொடர்ந்து திரை துறையில் இருப்பவர்கள் விவாகரத்து பெற்று வருவது அவர்களது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்