திரைப்படங்களில் காமெடி நடிகையாக வலம் வருபவர் நடிகை மதுமிதா. விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபாவை யாராலும் மறந்திருக்க முடியாது. எப்பேர்ப்பட்ட படமாக இருந்தாலும் சரி அதை கலாய்த்து தள்ளி விடுவார்கள். அதில் பெண் காமெடியாளராக வந்தவர் தான் மதுமிதா. இவர் சில படங்களிலும் நடித்திருந்தார். ஆனால் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் சீசன் 3யில் போட்டியாளராக கலந்து கொண்டார். அங்கு ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக தற்கொலைக்கு முயன்றார். அதனால் போட்டியிலிருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டார். பிக்பாஸில் தனக்கு மிகுந்த நெருக்கடி கொடுத்தார்கள், தன்னை ராக்கிங் செய்து மனரீதியாக துன்புறுத்தினார்கள், அதனால் தனது கையை கிழித்து கொண்டு போட்டியிலிருந்து வெளியேறியதாக பேட்டிகளில் கூறி வந்தார்.

மதுமிதா ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நடிகர் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்திருப்பார். இதில் அவரை ஜாங்கிரி என்றும் தேனடை என்றும் சந்தானம் கூறுவார். இதன் பின்னர் இவருக்கு ஜாங்கிரி மதுமிதா அல்லது தேனடை மதுமிதா என்று சொன்னால் தான் பலருக்கும் தெரியும், இந்தப் படத்திற்குப் பின்னர் சின்னத்திரையில் ஒளிபரப்பான சின்ன பாப்பா பெரிய பாப்பா சீசன் 2 நிகழ்ச்சியிலும் இவர் நடித்தார். பிக்பாஸ்க்குப் பிறகு பல படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. 2019 ஆம் ஆண்டு அவருக்கும், மோசஸ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆகி 3 ஆண்டுகளாக அவர்கள் இருவருக்கும் குழந்தை இல்லாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த மே மாதம் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்ததாக தனது சோசியல் மீடியா பக்கத்தில் அறிவித்திருந்தார் மதுமிதா
ஆனால் குழந்தையின் புகைப்படத்தை காட்ட வில்லை. இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு தன்னுடைய மகனின் புகைப்படத்தை முதன் முறையாக காட்டியுள்ளார். அதில் தேசியக் கொடியின் மூவரணத்தை போலவே மூன்று வண்ணத்தில் குழந்தைக்கு உடையை அணிவித்து போட்டோ சூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

