தமிழ் சினிமாவில் முன்னை நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா. இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது. ஓகே ஓகே படத்தில் நடித்து சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று உள்ளார். குழந்தை நட்சத்திரமாக பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்து இன்று முன்னணி நடிகையாக சினிமாவை கலக்கி வருகிறார் ஹன்சிகா. இவர் தமிழில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக மாப்பிளை படத்தில் நடித்து கதாநாயகியாக என்ட்ரி கொடுத்து உள்ளார்.

இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து உள்ளார். இவர் தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு , ஹிந்தி மற்றும் கன்னட சினிமாக்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது இவர் நீண்ட நாட்கள் காதலித்து வந்தவரை திருமணம் செய்து உள்ளார். திருமணத்திற்க்கு பிறகு சரியான பட வாய்ப்புகள் இவருக்கு கிடைக்காததால், கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.

இவர் மீண்டும் முன்மாதிரி சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்க வேண்டும் என்பதே இவரின் ரசிகர்களின் ஆசையாக உள்ளது. இந்நிலையில் நடிகை ஹன்சிகா புதிய வீடு வாங்கியுள்ளர். அதன் கிரஹப்ரவேச புகைப்படங்களை ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை ஹன்சிகாவுக்கு தெரிவித்து வருகின்றனர்.
