இணையத்தை கலக்கி கொண்டிருக்கும் ஒரு நபர் தான் திருமூர்த்தி. பிறவியிலேயே கண் பார்வை இல்லாத மாற்றுத்திறனாளியாக பிறந்த இவர், கிருஷ்ணகிரி மாவட்டம் நொச்சிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் தாயார் சமீபத்தில் உயிரிழந்தார். சிறுவயதிலேயே பார்வை இழந்ததால் அவரை பர்கூரில் உள்ள ஒரு மாற்றுத்திறனாளி பள்ளியில் பள்ளி படிப்பிற்காக சேர்த்தனர் அவர்களது பெற்றோர். ஆனால் பார்வையில்லாத காரணத்தால் அவரை தனியாக விடுவதற்கு அஞ்சி படிப்பை பாதிலேயே நிறுத்தி விட்டு தனது வீட்டிலேயே தங்களுடன் வைத்துக் கொண்டனர். 21 வயதாகும் திருமூர்த்தி 200க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை சரளமாக பாடும் திறமை கொண்டவர். இவர் வீட்டில் இருக்கும் பாத்திரங்கள், குடங்களை வைத்து இசையமைத்து பாட ஆரம்பித்தார். சொந்தமாக பல பாடல்களையும் எழுதி இருக்கிறார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

எந்த படத்தின் பாடலாக இருந்தாலும் சரி, எப்பேர்பட்ட இசைக்கருவிகளை பயன்படுத்தி இருந்தாலும் சரி, கையில் ஒரு குடத்தை வைத்துக்கொண்டு அதில் தாளம் தட்டிக் கொண்டே அந்த பாட்டை அப்படியே கச்சிதமாக பாடி காட்டும் திறமை உள்ளவர். சில வருடங்களுக்கு முன்பு விசுவாசம் படத்தில் வரும் கண்ணான கண்ணே பாடலை பாடினார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிக வைரலானது. அஜித் ரசிகர்கள் இந்த பாடலை சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பகிர்ந்தனர். இதனால் அந்த வீடியோ உலகம் முழுவதும் பரவியது. அதைத் தொடர்ந்து அவரை படங்களில் பாட வைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்றது. அவரை படங்களில் பாட இசையமைப்பாளர் இமான் வாய்ப்பு கொடுத்தார். சமீபத்தில் வெளியான அண்ணாத்தப் படத்தில் குலசாமி என்ற பாடலை திருமூர்த்தியை பாட வைத்தார். இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
இந்த பாட்ட இவர் பாடும்போது கண் கலங்க வைக்குது 😢
இளம்வயதுலேயே பெற்றோரையும்
பார்வையும் இழந்தவர்😔💔
தன்னம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை, நல்ல குரல்வளம்! திறமைக்கு மரியாதை செலுத்துவோம்🙏Kudos to @immancomposer @sidsriram For evergreen beautiful #KannanaKanney song from #Viswasam pic.twitter.com/C0frrueezg
— Bala Jith (@balajithmsd07) September 21, 2019
அதன் பின்னர் இவர் சில படங்களில் பாடியிருந்த போதிலும் இவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. சமீபத்தில் கமலஹாசனின் விக்ரம் படத்தில் இடம்பெற்ற பத்தல பத்தல பாடலை தன்னுடைய குடத்திலேயே இசையமைத்து மிக அருமையாக பாடி இருந்தார் திருமூர்த்தி. இந்த வீடியோ வைரலான நிலையில் கமலஹாசனே அவரை நேரில் அழைத்து பாராட்டி இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் பயிற்சி பள்ளியில் முறையாக இசை கற்பதற்கு தேவையான செலவுகளையும் செய்திருக்கிறார். இந்த நிலையில் ஏ ஆர் ரகுமான் இசையமைத்து பாடியிருக்கிற பொன்னியின் செல்வன் படத்தில் வரும் பொன்னி நதி பாடலையும் அதேபோல குடத்தை வைத்து தாளம் போட்டு பாடி அசத்தியிருக்கிறார்
இந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது. திருமூர்த்தி போன்ற நல்ல திறமையாளர்கள் சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு. அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..
Youtube Video Code Embed Credits: Singer Thirumoorthi