என்ன தப்பா சித்தரிக்காதீங்க என கமலை எதிர்த்து திமிராக பேசிய ஆயிஷா.! பங்கம் செய்யும் நெட்டிசன்கள்.!

வெளியிட்டது

என்னை தவறாக சித்தரித்து விடாதீர்கள் என்று கமலஹாசனை எதிர்த்து பேசிய ஆயிஷாவை நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். டிக்டாக்கில் நடித்து பிரபலமானவர் ஆயிஷா. இவர் முதன் முறையாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பொன் மகள் வந்தாள் என்னும் சீரியல் மூலமாக அறிமுகம் ஆனார். ஒரே மாதத்தில் இவருக்கும் நாடகத்தின் இயக்குனருக்கும் மோதல் ஏற்பட நாடகத்தை விட்டு விலகினார். பின்னர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மாயா என்ற தொடரின் மூலமாக பிரபலமானார். ஆனால் அவருக்கு மிகுந்த பிரபலத்தை கொடுத்த சீரியல் என்றால் அது சத்யா தான். இந்த சீரியலில் நடிகர் விஷ்ணுவுடன் இணைந்து ரவுடி பேபி என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார். துணிச்சலான பெண்ணாக டாம் பாய் பாப் போல, கட்டிங்குடன் இவர் நடித்ததால், எளிதில் மக்கள் மனங்களில் இடம் பிடித்தார்.

என்ன தப்பா சித்தரிக்காதீங்க என கமலை எதிர்த்து திமிராக பேசிய ஆயிஷா.! பங்கம் செய்யும் நெட்டிசன்கள்.! 1

இந்த நிலையில் ஆயிஷாவிற்கு மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. பிக்பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். ஆரம்ப முதலே போட்டி புரியாதது போலவும், தனக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாகவும், வீசிங் ப்ராப்ளம் இருப்பதாகவும் கூறி விளையாட்டுகளில் அவ்வளவாக பங்கேற்காமல் இருந்து வந்தார். ஆனால் தொடர்ந்து சண்டை, சச்சரவுக்கு பெயர் போனவராகவும் இருந்து வந்தார் ஆயிஷா. இந்த நிலையில் நேற்று நடந்த எபிசோடில் தனலட்சுமி ஷெரினாவை தள்ளி விட்டதற்காக குறும்படம் போட்டு காண்பித்தார் கமலஹாசன். அந்தப் படத்தை பார்த்துவிட்டு ஆயிஷா தனக்கு எதுவும் புரியவில்லை என்று கூறினார். மூன்று முறை படம் போட்டு காட்டியும் உங்களுக்கு புரியவில்லையா என்று கமலஹாசன் கோபமாக கேள்வி எழுப்பி இருந்தார்.


இந்த நிலையில் திடீரென பொம்மை போட்டியில் இருந்து உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் விலகுவதாக அறிவித்த ஆயிஷா, ரட்சிதா பொம்மையை குப்பை தொட்டியில் போடும்படி செய்து ரட்சிதாவை ஆட்டத்திலிருந்து வெளியேற்றினார். இதை கடுமையாக கண்டித்த கமலஹாசன் ஆயிஷாவுக்கு எதிராக கோபமான கருத்துக்களை கூறினார். விளையாட்டில் விருப்பமில்லாத ஆயிஷா மற்றும் ஷெரினா ஆகியோர் தனக்கு தேவைப்படும்போது விளையாடி ரட்சிதாவை தோற்கடித்ததாக குற்றம் சாட்டினார் கமலஹாசன். இதை ரட்சிதாவும் அமோதித்தார். ஆனால் ஆயிஷாவோ தான் அந்த நோக்கத்தில் ரட்சிதாவின் பொம்மையை எடுக்கவில்லை, ரட்சிதாவின் பொம்மையை யாரும் எடுக்காத காரணத்தினால் தான் அந்த பொம்மையை எடுத்தேன், என்னை தவறாக அப்படி சித்தரித்து விடாதீர்கள் என்று கமலஹாசனிடம் கூறினார் ஆயிஷா.

ஆயிஷாவின் இந்த பேச்சு பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தியது. கமலஹாசன் ஒரு மிகப்பெரிய கலைஞர். தமிழ் திரையுலகம் மட்டும் இல்லாமல் இந்திய திரை உலகமே மதிக்கும் ஒரு நபராக இருக்கிறார். ஆறாவது முறையாக பிக் பாஸ் சீசனை மிகக் கட்டுக்கோப்பாக நடத்தி வருகிறார் கமலஹாசன். முந்தைய சீசன்களில் கலந்து கொண்ட வனிதா, மீரா மிதுன், பாலாஜி முருகதாஸ் போன்ற போட்டியாளர்கள் கடுமையாக வீட்டில் உள்ளவர்களை திட்டிய போதும், கமலை எதிர்த்து ஒரு வார்த்தைக் கூட பேசியதே இல்லை. ஆனால் ஆயிஷா என்னை தவறாக சித்தரிக்காதீர்கள் என்று கமலிடம் முகத்தில் அடித்தால் போல் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் ஆயிஷா மீது தொடர்ந்து மீம்ஸ்களும் வீடியோ மீம்ஸ்களும் பறந்து வருகிறது. ஆயிஷாவை அடுத்த வாரம் வெளியேற்ற வேண்டும் என்ற கண்டன குரல்களும் வலுத்து வருகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்