நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு மஞ்சிமாவுடன் காதலை உறுதி செய்த கெளதம் கார்த்திக்?

கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது. இருவரும் காதலித்து வருவதாக தகவல் பரவிய நிலையில் அதை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது சமூக வலைதள பக்கத்தில் மஞ்சிமாவுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார் கெளதம். நவரச நாயகன் கார்த்திக்கின் மகன்தான் நடிகர் கௌதம் கார்த்திக். இவர் கடல் என்ற படத்தில் மூலமாக திரைத்துறையில் அறிமுகமானார. முதல் படமே மணிரத்தினம் படத்தில் நடித்த பிரபலமானார். பின்னர் இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். ஆனால் இவருக்கு எந்த படங்களும் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை.

நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு மஞ்சிமாவுடன் காதலை உறுதி செய்த கெளதம் கார்த்திக்? 1

விளம்பரம்

சமீபத்தில் இவர் ஆனந்தம் விளையாடும் வீடு என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் சிம்புவுடன் இணைந்து பத்து தல படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவர் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் பரவியது. சமீபத்தில் கௌதம் கார்த்திக் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கேள்வி பதிலை நடத்தி இருந்தார்., அப்பொழுது ஒரு ரசிகர் உங்களுக்கு எப்பொழுது திருமணம் என்று கேட்டிருந்தார். அப்போது விரைவில் நடக்கும் என்று பதில் கூறியிருக்கிறார் கெளதம்.

தொடர்புடையவை  "எப்படி இருக்கிறது அருள்நிதி-எருமை சாணி விஜயகுமாரின் "D block"!! ட்விட்டர் ரிவியூ!!

நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு மஞ்சிமாவுடன் காதலை உறுதி செய்த கெளதம் கார்த்திக்? 3

விளம்பரம்

தேவராட்டம் என்னும் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது கௌதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் இருக்கும் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருவரும் இரண்டு வருடங்களுக்கு மேலாக காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறப்பட்டது. ஆனால் இருவரும் தங்களது காதல் குறித்து அதிகாரப்பூர்வமாக எந்தவித கருத்தையும் வெளியிடாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சுமா மோகன் இருவரும்நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இதன் மூலம் அவர்கள் இருவரும் காதலிப்பது உறுதியாகியுள்ளது.

நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு மஞ்சிமாவுடன் காதலை உறுதி செய்த கெளதம் கார்த்திக்? 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment