பிக்பாஸ்ஸில் கலந்து கொண்டுள்ள திருநங்கை ஷிவின் போல அசீம் செய்து காட்டியதால் நெட்டிசன்கள் பலரும் அசீமை திட்டி தீர்த்து வருகின்றனர். அசீமின் வார்த்தைகள் நாளுக்கு நாள் எல்லை மீறி போவது நடந்து வருகிறது. சின்ன திரை நடிகர் அசீம் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலமாக நடிகராக அறிமுகமானார். அதற்கு முன்பாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். பின்னர் விஜய் டிவியில் பகல் நிலவு என்ற சீரியலில் நடித்தார். இந்த நாடகம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. பிறகு இவர் கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலில் நடித்து வந்தார். அந்த சீரியல் பாதியிலேயே முடிக்கப்பட்டது. அதன் பின்னர் ஜீ தமிழில் நிறம் மாறாத பூக்கள் சீரியலில் நடித்து வந்தார்.

பின்னர் கடைசியாக பூவே உனக்காக சீரியலில் நடித்தார். அதன் பின்னர் அவருக்கு பெரிய அளவில் எந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இதனால் பிக்பாஸ்ஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. சீசன் 6ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். முதல் வாரமே பிரச்னை தொடங்கியது. வரிசை படுத்தும் போட்டியின் போது ஆயிஷாவை வாடி போடி என்று பேச தொடங்கினார் அசீம். இது மிக பெரிய பிரச்சனையாக வெடித்தது. தட்டி கேக்க வந்த விக்ரமனையும் வெள்ளை சட்டை போட்டால் நீயெல்லாம் அரசியல்வாதியா என்று திட்டி தீர்த்தார். அசீமின் இந்த நடவடிக்கைகள் பார்ப்பவர்களுக்கு முக சுளிப்பை ஏற்படுத்தியது.
அந்த பிரச்சனை எல்லாம் முடிந்து நேற்று பொம்மை டாஸ்கின் போது அசீம் எல்லை மீறி நடந்து கொண்டார். தனலட்சுமியின் நெஞ்சு பகுதியில் பிடித்து தள்ளினார். மேலும் திருநங்கை ஷிவினை அவரை போல் செய்து காட்டி அருவருப்பாக நடந்து கொண்டார். இது பலரையும் முகம் சுளிக்க வைத்தது. மேலும் அமுதவாணனை பார்த்து விஜய் டிவியில் இருந்து வந்தால் நீ பெரிய ஆளா? இவருதான் விஜய் டிவியை தூக்கி நிறுத்திட்டாரா என்று திட்டி தீர்த்தார். மேலும் அவருடன் சண்டைக்கு வந்த அனைவரையும் ஒருமையில் வாடா போடா வாடி போடி என்று பேசினார். இதை தொடர்ந்து அசீமுக்கு எதிராக மீம்ஸ்களை பறந்து வருகிறது.
அசீமுக்கு பைத்தியம் முத்தி விட்டது என்றும், அவரை மனநல மருத்துவமனையில் சேர்த்து விட வேண்டும் என்றும் என்று மீம்ஸ்களை பறக்க விட்டு வருகின்றனர். திருநங்கை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கும் விஜய் டிவி அசீமின் இந்த நடவடிக்கைகளை கண்டிக்க தவறியது ஏன் என்ற கேள்விகளையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.