என்னால முடியல.! எல்லாரும் என்ன மன்னிச்சிடுங்க.! Biggboss-க்கு பிறகு முதல் பதிவை பதிவிட்ட ஜனனி.!

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் முதல் பதிவை ஜனனி பதிவிட்டு இருக்கிறார். instagram பக்கத்தில் தனது புகைப்படங்களுடன் அவர் உருக்கமாக ஒரு பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். பிக்பாஸில் இலங்கை சேர்ந்தவர்களை கலந்து கொள்ள வைப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது பிக்பாஸ் குழு.்அந்த வகையில் சீசன் 3யில் லாஸ்லியா மற்றும் தர்ஷன் ஆகிய இருவரை களம் இறக்கி இருந்தார்கள். அதே போல் சீசன் 5ல் மதுமிதாவை களம் இறக்கி இருந்தார்கள். அந்த வகையில் சீசன் 6 தொடங்கியது முதல் இலங்கையைச் சேர்ந்த யாராவது ஒருவரை களம் இறக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜனனியை களம் இறக்கி இருந்தார்கள். ஜனனி இலங்கையில் இருக்கும் தமிழ் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் மற்றும் செய்தி வாசிப்பாளராகவும் இருந்து வந்தார். இந்த பிரபலத்தை கொண்டு இவருக்கு பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. சீசன் 6ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார்.

என்னால முடியல.! எல்லாரும் என்ன மன்னிச்சிடுங்க.! Biggboss-க்கு பிறகு முதல் பதிவை பதிவிட்ட ஜனனி.! 1
மேலும் சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் ஜனனி தொடர்ந்து டிக் டாக் செய்து அந்த வீடியோக்களை இணையதளத்தில் பகிர்ந்து வந்தார். ஜனனிக்கு சுமார் ரெண்டு லட்சம் பின்தொடர்பவர்கள் இன்ஸ்டாகிராமில் இருக்கிறார்கள். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியிருக்கும் ஜனனி, தனது புகைப்படங்களை பகிர்ந்து உருக்கமான பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். அதில் அவர் நான் இந்த வீட்டில் இருப்பதற்கும் என்னை ஏற்றுக் கொண்டதற்கும் மக்கள் அனைவருக்கும் நன்றி. நீங்கள் அளித்த வாக்குகள் என்னை பெரிய பாதையில் செல்வதற்கு உந்துதலாக இருந்தது. என்னை மன்னித்து விடுங்கள் உங்களுடைய எதிர்பார்ப்புகளை நான் நிறைவேற்றாமல் போனதற்கு. உங்கள் அனைவரையும் இந்த தருணத்திலிருந்து ஏதாவது ஒரு வகையில் மகிழ்விக்க நான் முயற்சி செய்கிறேன். மிக்க நன்றி என்று பதிவிட்டு இருக்கிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  சரவணன் - தங்கமயிலுக்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.! பாண்டியனை ஏமாற்றிய பெண் வீட்டார்.!

என்னால முடியல.! எல்லாரும் என்ன மன்னிச்சிடுங்க.! Biggboss-க்கு பிறகு முதல் பதிவை பதிவிட்ட ஜனனி.! 3

பொதுவாக இலங்கையைச் சேர்ந்த போட்டியாளர்களுக்கு தமிழ் மக்கள் மத்தியில் ஒரு தனி இடம் உண்டு. அவர்கள் வெற்றி பெற வேண்டும் என்று பலரும் நினைத்தது உண்டு. அந்த வகையில் லாஸ்லியா தர்ஷன் அனைவருமே மக்கள் மனங்களில் இடம் பிடித்தார்கள். ஜனனியும் அது போல் ஆரம்பத்தில் தனது அழகான தமிழால் பலரை கவர்ந்தார். இருந்தபோதிலும் என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆட்டத்தில் சுணக்கம் காட்டி வந்தார். குறிப்பாக அமுதவாணன் உடன் அவர் நேரத்தை செலவிட்டு விளையாட்டில் ஆர்வம் காட்டாமல் வந்தார். அமுதவாணன் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக பல இடங்களில் அவர் விட்டும் கொடுத்தார். இதனால் ரசிகர்கள் அனைவரும் ஜனனிக்கு குறைந்த வாக்குகளை அளித்து அவரை தற்போது வீட்டில் இருந்து வெளியேறி இருக்கின்றனர். தொடர்ந்து அவர் பல வெற்றிகளை பெற வேண்டும் என்றும் அவரை வாழ்த்தி வருகின்றனர்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment