வெண்கல பானைய உருட்டுன மாதிரி லொட லொடன்னு.! அசீமை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!

வெளியிட்டது

பிக்பாஸ் சீசன் 6ல் கலந்து கொண்ட போட்டியாளர் அசீமை நெட்டிசன்கள் வறுத்து எடுத்து வருகின்றனர். கடந்த ஒன்பதாம் தேதி மாலை 6:00 மணிக்கு மிகப் பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது பிக்பாஸ் சீசன் 6. இரண்டு நாட்களை கடந்து விட்ட பிறகு ஓரளவிற்கு சண்டை சச்சரவு என நகர்ந்து கொண்டிருக்கிறது. பிக்பாஸ் எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு இந்த முறை 20 போட்டியாளர்களை களமிறக்கி இருக்கிறது. இவர்களின் பெயர்களை நினைவில் வைத்துக் கொள்வதற்கே சற்று சிரமமாக இருக்கிறது. அதேபோல் வீடும் சற்று சந்தை கடை போல் நிம்மதி இழந்து காணப்படுகிறது. அனைவரும் இரைந்து பேசுவதால் ஏற்படும் கூச்சல் குழப்பத்தால் யார் என்ன பேசுகிறார்கள் என்பதே தெரியாத அளவிற்கு பிக்பாஸ் சென்று கொண்டிருக்கிறது.

வெண்கல பானைய உருட்டுன மாதிரி லொட லொடன்னு.! அசீமை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.! 1

எப்போதும் இல்லாத அளவிற்கு முதல் நாளிலேயே டாஸ்க் என பிக் பாஸ் ஆரம்பித்து இருக்கிறார். சீசன் 4 மற்றும் 5 பெரிய அளவில் வெற்றியடையாத காரணத்தினால் இந்த சீசனை கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி அடைய பிக் பாஸ் குழு திட்டமிட்டு உள்ளது. இதற்காக போட்டியாளர்களுக்கு உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பல சவால்களை கொடுக்க பிக் பாஸ் குழு திட்டமிட்டுள்ளது. மேலும் பிக்பாஸில் தற்போது கேப்டன் தேர்வு செய்யப்படவில்லை. நான்கு கிளப் ஹவுஸ்களாக பிரிந்து வேலையை பார்த்து வருகின்றனர். சமையல் டீம், பாத்திரம் கழுவும் டீம், பாத்ரூம் கழுவும் டீம், வீடு சுத்தம் செய்யும் டீம் என நான்கு ஹவுஸ்களாக பிரிந்து ஹவுஸ் மேட்ஸ் வேலைகளை பார்த்து வருகின்றனர். சமைப்பதில் குறிப்பாக சண்டை நடந்து வருகிறது. அதில் மகேஸ்வரி நேற்று அசீம் இடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்.

 


அதேபோல் அசீமும் ஒவ்வொரு நபரிடம் சென்று அளவுக்கு அதிகமாக பேசுவதும், நிகழ்ச்சி சுவாரசியமாக கொண்டு செல்கிறேன் என்ற பெயரில் வளவள என்று பேசுவதும் பார்ப்பவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அசீமை கழுவி ஊற்றி வருகின்றனர். அசீம் ஏற்கனவே செய்தி வாசிப்பாளராகவும், பல தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்தவர். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்று சீரியலில் நடிகை ஷிவானி உடன் இணைந்து நடித்திருந்தார். ஷிவானி சீசன் 4ல் என்ட்ரி கொடுத்த பொழுதே இவரும் வைல்ட் காடு என்ட்ரியாக உள்ளே வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அப்போது வரவில்லை. சீசன் 6ல் அவரை களம் இறக்கி இருந்தது பிக்பாஸ். இவர் நன்றாக விளையாடுவார் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் இவர் அதீதமான பேச்சுகளால் மக்களை வெறுப்படைய செய்துள்ளார்.

இதனால் இவரை நெட்டிசன்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் புகுந்த வெண்கலப் பானை அசீம், சீசன் 6ன் அபிஷேக் ராஜா என்றெல்லாம் மீம்ஸ் போட்டு வறுத்து வருகின்றனர். இதுபோன்று அதீத பேச்சுக்களால் ஏற்கனவே சீசன் 5ல் அபிஷேக் ராஜா மக்களால் வெளியேற்றப்பட்டார். அவரைப் போலவே அதிக பேச்சுகளும் தேவையில்லாத இடத்தில் மூக்கை நுழைத்து பேசுவதும், whatsapp யூனிவர்சிட்டியில் படித்த நபர்கள் என்று கமல் சொன்னது போல அதீதமாக அட்வைஸ் கொடுப்பதும் என பலரின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார் அசீம். அவர் வாயை குறைக்கவில்லை என்றால் அபிஷேக் ராஜா போன்று அவரும் விரைவில் வீட்டை விட்டு வெளியேறுவார் என்பது மாற்றுக் கருத்து இல்லை என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்