தமிழின் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அமிதாப்பச்சனுக்கு 80வது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். தொடர்ந்து அவருக்கு நன்றி தெரிவித்து அமிதாப் பச்சன் ட்விட்டரில் ட்வீட் ஒன்றை செய்து இருக்கிறார். தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் 160 படங்களுக்கும் மேலாக நடித்து திரை உலகில் சாதனை புரிந்திருக்கிறார். தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்கிற படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் பாலிவுட் திரை உலகின் சூப்பர் ஸ்டார் ஆக இருக்கும் அமிதாப்பச்சனுக்கு நேற்று அவர் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். அமிதாப்பச்சன் நேற்று தனது 80 வது பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடியிருந்தார். இவருக்கு அனைத்து திரையுலகை சேர்ந்தவரும் வாழ்த்து மழை பொழிந்து வந்தனர்.

திரையுலகினர் மட்டுமில்லாமல் அரசியல்வாதிகள், விளையாட்டு துறையை சேர்ந்தவர்கள், அவரது ரசிகர்கள் என்று அமிதாப்பச்சனுக்கு நேற்று பிறந்தநாள் வாழ்த்து மழையை பொழிந்து வந்தனர். இந்த நிலையில் சூப்பர் ஸ்டார்ரும் தன்னுடைய வாழ்த்தை ட்விட்டர் பக்கத்தின் மூலமாக தெரிவித்து இருந்தார். அதில் அமிதாப்பச்சனை, நீங்கள் உண்மையான லெஜன்ட், என்னை எப்போதும் கவர்ந்த நபர்களில் ஒருவர், இந்திய திரைப்படத்தின் சகோதரத்துவத்தின் உண்மையான ஹீரோ தனது 80 வது வயதிற்குள் அடி எடுத்து வைக்கிறார். பிறந்தநாள் வாழ்த்துக்கள் அமிதாப் ஜி. எப்போதுமே என்னுடைய அன்பும் வாழ்த்தும் உங்களுக்கு இருந்து கொண்டே இருக்கும் என்று பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த அமிதாப்பச்சன் தற்போது அவருக்கு பதில் அளிக்கும் விதமாக ஒரு ட்வீட் ஒன்றைப் போட்டுள்ளார்.

அதில் அமிதாப் கூறும் போது, ரஜினி சார் நீங்கள் எனக்கு அதிக மதிப்பை தருகிறீர்கள். உங்களின் இடத்திற்கும் பெருமைக்கும் என்னை உங்களுடன் ஒப்பிடவே முடியாது. நீங்கள் ஒரு சக நடிகராக மட்டுமல்லாமல் மிக அன்பான நண்பராகவும் இருக்கிறீர்கள். உங்கள் அன்புக்கும் பாசத்திற்கும் என்னுடைய நன்றிகள் என்று பதிலுக்கு பதிவிட்டு இருக்கிறார். இரண்டு சூப்பர் ஸ்டார்களும் பேசிக் கொண்ட இந்த பதிவுகள் தற்போது இணையத்தில் வைரலாக இருக்கிறது.
