தனலட்சுமியை மோசமாக விமர்சித்த அசல் கோளாறு.! அடிக்க பாய்ந்த தனலட்சுமி.!

வெளியிட்டது

பிக்பாஸ் வீட்டில் அசல் கோளாறுக்கும் தனலட்சுமிக்கும் மிகப்பெரிய சண்டை வந்துள்ளது. அசல் கோளாறு தனலட்சுமியை பார்த்து பெரியம்மா என்றும் ஆன்ட்டி என்றும் மிகவும் மோசமான வார்த்தைகளால் உருவ கேலி செய்துள்ளார். இதனால் கோபம் அடைந்த தனலட்சுமி அசல் கோளாறை வெளுத்து வாங்கியிருக்கிறார். அந்த காணொளி தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. 5 சீசன்களை முடித்த பிக்பாஸ் தற்போது ஆறாவது சீசனில் அடி எடுத்து வைத்திருக்கிறது. வழக்கம்போல ஐந்து சீசர்களை தொகுத்து வழங்கிய கமலஹாசனே இந்த முறையும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். எப்போதும் போல இல்லாத அளவிற்கு 21 போட்டியாளர்கள் இருப்பதால் ஒரு வாரம் கடந்தும், இன்னும் போட்டியாளர்களின் பெயர்களை நினைவில் வைத்துக் கொள்ளவே சிறிது கஷ்டமாக இருக்கிறது.

தனலட்சுமியை மோசமாக விமர்சித்த அசல் கோளாறு.! அடிக்க பாய்ந்த தனலட்சுமி.! 1

 

எப்போதும் பிரபலங்களை மட்டுமே அழைத்து பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்துவார்கள். ஆனால் இந்த முறை சற்று வித்தியாசமாக மக்களிலிருந்து இரண்டு பேரை தேர்ந்தெடுத்து உள்ளே அனுப்பி இருக்கிறார்கள். அதில் ஒருவர் தனலட்சுமி. டிக் டாக் மூலமாக பிரபலமான தனலட்சுமிக்கு பிக்பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இவர் படங்களில் வருவது போலவே அப்படியே மேக்கப் போட்டு டிக் டாக் செய்து வந்தார். டிக் டாக் முடங்கிய பிறகு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து வந்தார். தாயின் அரவணைப்பில் மட்டுமே வளர்ந்த அவர், திரைத்துறையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து வந்தார். அவருக்கு பிக்பாஸ் ஒரு வாய்ப்பை வழங்கியது. ஆனால் உள்ளே வந்த நாள் முதல், தனலட்சுமி சண்டை சச்சரவு என இருந்து வருகிறார்.

முதல் வாரத்திலேயே ஜி பி முத்துவிடம் சண்டை போட்டு, வீடே நிம்மதி இல்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது அசல் கோளாறு இடம் அவர் சண்டை போட்டுள்ளார். ஏற்கனவே பெண்களிடம் அசல் கோளாறு நடந்து கொள்ளும் விதம் இணையத்தில் பெரிய அளவில் சர்ச்சை ஆகி வருகிறது. பெண்களை அத்துமீறி தொடுவது, தடவுவது என்று அசல் கோளாறு நடந்து கொள்வதால், அவரை ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது தனலட்சுமி உருவ கேலி செய்யும் விதமாக ஆன்ட்டி என்றும், பெரியம்மா என்றும் விமர்சித்திருக்கிறார் அசல் கோளாறு. இதை பார்த்த தனலட்சுமி நீயா எனக்கு சோறு போடுகிறாய் என்று கடுமையான வார்த்தைகளில் சண்டை போட்டுள்ளார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below Video..

Youtube Video Code Embed Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்