பிக்பாஸில் கலந்து கொண்டுள்ள ஜிபி முத்து தனக்கு மிக மன அழுத்தம் இருப்பதாகவும், என் பிள்ளைகளை தேடுவதாகவும், உடல் நலமில்லாமல் இருக்கும் மகன் விஷ்ணுவை பார்க்க வேண்டும் என்றும் பிக்பாஸ்ஸிடம் அழுதுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. பிக் பாஸ் சீசன் சிக்ஸ் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணிக்கு மிக பிரம்மாண்டமாக தொடங்கியது. எப்போதும் போல் இல்லாத அளவிற்கு இந்த முறை 20 போட்டியாளர்களை களம் இறக்கி இருக்கிறது பிக் பாஸ். அது மட்டுமில்லாமல் நேற்று மைனா நந்தினியையும் உள்ளே அனுப்பி இருக்கிறது. 5 சீசன்களை தொகுத்து வழங்கியது போலவே தற்போது ஆறாவது சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார் கமலஹாசன். ஜிபி முத்து, ராபர்ட் மாஸ்டர், திருநங்கை சிவின் கணேசன், மெட்டி ஒலி சாந்தி, அசீம், விஜே மகேஸ்வரி, அமுதவாணன் என பல முன்னணி பிரபலங்களை களம் இறக்கியுள்ளது பிக்பாஸ் டீம்.

சீசன் சிக்ஸ் ஆரம்பித்த நான்கு நாட்களிலேயே சண்டை சச்சரவு என தொடங்கியிருந்தது. கமலே 40 நாட்களில் நடக்க வேண்டிய நிகழ்வுகள் நான்கே நாட்களில் நடந்து வருவதாக கூறியிருந்தார். இதில் குறிப்பிடத்தக்க நபராக ஜி பி முத்து இருக்கிறார். வீட்டில் உள்ள அனைவருமே ஜிபி முத்துவை விரும்புகின்றனர். வீட்டின் பெஸ்ட் பெர்பார்மர் என்ற கேள்விக்கு ஜி பி முத்துவை பலரும் தேர்வு செய்து இருந்தனர். தான் பாத்திரம் கழுவும் அணியில் இருந்தாலும், உணவு சமைக்கும் அணிக்கு அவர் உதவி செய்தது பலரையும் நெகழ்ச்சி அடைய வைத்தது. அதற்கு அவர் விளக்கம் கூறும் பொழுது உணவு சமைப்பவர்கள் தனியாக நின்று கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள், அதனால் எனக்கு முடிந்த உதவியை செய்தேன் என்று விளக்கம் அளித்து இருந்தார். இதனால் ஜி பி முத்துவின் மீது இருந்த மரியாதை இன்னும் அதிகமானது.

இந்த நிலையில் இன்று ஜிபி முத்து தனது குடும்பத்தை நினைத்து மிகவும் வருந்தினார். அவரை பிக்பாஸ் தனியாக அழைத்து பேசினார். ஜிபி முத்து தனக்கு மிக மன அழுத்தம் இருப்பதாகவும், என் பிள்ளைகளை தேடுவதாகவும், உடல் நலமில்லாமல் இருக்கும் மகன் விஷ்ணுவை பார்க்க வேண்டும் என்றும் பிக்பாஸ்ஸிடம் கதறி அழுதார். ஆனால் பிக்பாஸ் எவ்வளவோ சமாதானம் சொல்ல முயன்றும் ஜிபி முத்து பிள்ளைகளை பார்க்க வேண்டும் என்று கதறி அழுதார். ஆனந்த், பிள்ளைகள் என அனைவரின் விருப்பமும் நீங்கள் 100 நாள் இருந்து ஜெயிக்க வைக்க வேண்டும் என்பதுதான் என்று சொல்லி பிக்பாஸ் அனுப்பி வைத்தார். ஜிபி முத்து தொடர்வாரா இல்லை அவரது மனநலம் கருதி வெளியேறுவாரா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
GP Muthu confession room talk with Bigg Boss.#BiggBossTamil6 pic.twitter.com/PaI47ryNFK
— Bigg Boss Videos & Updates (@BBFollower7) October 19, 2022
— Bigg Boss Videos & Updates (@BBFollower7) October 19, 2022