பிக்பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக தற்போது பைனலில் இருக்கும் இரண்டு போட்டியாளர்களுக்கு இடையே சமமான மற்றும் கடுமையான போட்டி நீடித்து வருகிறது. இருவரும் சம பலத்துடன் மோதி வருகின்றனர். இந்த நிலையில் இன்றுடன் பிக்பாஸ் சீசன் சிக்ஸ் நிறைவடைந்து நாளை மறுநாள் வின்னர் யார் என்று அறிவிக்கப்பட இருக்கிறது. பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி இன்றுடன் 103 நாட்கள் நடைபெற்று முடிந்து இருக்கிறது. எப்பொழுதும் 106 நாட்கள் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 6 கடந்த அக்டோபர் 9ம் தேதி கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பம் முதலே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் யாரும் எதிர்பாராத விதமாக 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் டிஸ்னி hotstar-ல் நேரடியாக 24 மணி நேரமும் ஒளிபரப்பு செய்யப்பட்டதால் இந்த சீசனுக்கு ரசிகர்களின் ஆதரவு பெருமளவில் குவியத் தொடங்கியது. தற்போது 16 போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் 5 போட்டியாளர்கள் மட்டுமே இறுதி கட்டம் வரை இருந்து வருகின்றனர்.

கடைசி வாரத்தில் பிக்பாஸ் வரலாற்றிலேயே முதல்முறையாக இரண்டு முறை பணப்பெட்டிகள் வைக்கப்பட்டது. முதன்முறை வைக்கப்பட்ட பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு கதிரவன் மூன்று லட்சத்துடன் வெளியேறினார். பின்னர் இரண்டாவது ஆக வைக்கப்பட்ட பணப்பெட்டியில் 11 லட்சத்து 75 ஆயிரத்துடன் தற்போது அமுதவாணன் வெளியேறி இருக்கிறார். மீதம் அசீம், விக்ரமன், ஷிவின், மைனா ஆகிய நான்கு பேர் தான் களத்தில் இருக்கிறார்கள். இதில் யார் வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்ப்பது மக்களிடையே எழுந்து வருகிறது. விக்ரமனுக்கு அரசியல் பின்புலம் இருப்பதால் அவருக்கு பலரும் ஆதரவு கொடுத்து வருகின்றனர். குறிப்பாக அவர் சார்ந்திருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், அதே கட்சியில் எம்எல்ஏவாக இருக்கும் அசீமின் தாய் மாமா ஆளூர் ஷாநவாஸ், பிக்பாஸ் சீசன் 2 வில் வெற்றியாளரான ரித்திகா, காமெடி நடிகை ஆர்த்தி கணேஷ், மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி போன்ற பலரும் விக்ரமனுக்கு ஆதரவாக “அறம் வெல்லும்” என்ற ஹேஷ்டேக்குடன் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அதே போல் அசீமுக்கும் இணையத்தில் பொதுமக்களின் ஆதரவு பெருகி வருகிறது. அவரை ஆதரிக்கும் பொதுமக்கள் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறார்கள். இதனால் அசீம் மற்றும் விக்ரமன் இருவரில் யாராவது ஒருவர் தான் வெற்றியாளராக முடியும் என்கிற நிலைமை தற்போது ஏற்பட்டு இருக்கிறது. அசீமுக்கு பொதுமக்களின் ஆதரவும், விக்ரமிற்கு பொதுமக்களின் ஆதரவுடன் அரசியல்வாதிகளின் ஆதரவும் இருப்பதால் இருவரில் யார் ஜெயிப்பார்கள் என்கிற பரபரப்பு இந்த வாரம் முழுவதும் தொற்றிக் கொண்டுள்ளது. அதிகாரப்பூர்வமற்ற முறையில் எடுக்கப்படும் இணையதள வாக்கெடுப்பில் அசீம் முன்னிலை பெற்று வருகிறார். ஆனால் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்ற வரிகளுக்கு ஏற்ப கடைசி நிமிடத்தில் நிலைமை எப்படி வேண்டுமானாலும் மாறும் என்கிற சூழல் இருந்து வருகிறது. இரு போட்டியாளர்களின் ரசிகர்களும் தங்கள் அணி வெற்றி பெற வேண்டும் என்று ட்விட்டர் மற்றும் இணையதளங்களில் கடுமையாக மோதிக் கொண்டு வருகின்றனர்.
பிக்பாஸ் வரலாற்றிலேயே முதல்முறையாக பைனலுக்கு தேர்வாகும் இரு போட்டியாளர்களும் சம அளவில் மோதிக் கொண்டிருப்பது இதுவே முதல் முறையாகும். சமூக வலைத்தளங்களில் இந்த இருவருக்கும் சமமான போட்டியை நிலவி வருகிறது. இறுதியில் யார் டைட்டிலை வெல்லப் போகிறார்கள் என்கிற பரபரப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருக்கிறது. இன்னும் சிலரோ அசீம் மற்றும் விக்ரமன் இருவருக்கும் முதல் பரிசு கொடுக்கப்படலாம் என்றும் தங்கள் யூகங்களை கருத்துக்களாக தெரிவித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் இல்லை என்றால் ஒரு மாற்றத்திற்காக திருநங்கையான ஷிவினுக்கு அந்த வெற்றி பதக்கம் கொடுக்கப்படலாம் என்கிற கருத்தும் நிலவிக் கொண்டிருக்கிறது. எது எப்படியோ இன்னும் ஓரிரு நாட்களில் யார் வெற்றியாளர் என்பதை தெரிந்து விடும். அதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.