Categories: Bigg Boss Tamil 6

கடைசி நிமிடத்தில் நடந்த ட்விஸ்ட்.! இந்த வாரம் வெளியேற போகும் போட்டியாளர் இவர் தானா?

வெளியிட்டது

பிக்பாஸ் சீசன் 6ல் இந்த வாரம் வெளியேற போகும் போட்டியாளர் பற்றி தற்போது தகவல்கள் கிடைத்திருக்கிறது. வார இறுதி நாள் என்றால் ஓட்டு எண்ணிக்கையில் பின் தங்கியிருக்கும் போட்டியாளரை பிக்பாஸ் வெளியேற்ற திட்டமிட்டுள்ளது. அதன்படி மகேஸ்வரி மற்றும் ராம் ராமசாமிக்கு மிகக்குறைவான ஓட்டுகளை கிடைத்துள்ளன. இதில் மகேஸ்வரி கண்டன்ட் கொடுப்பதால் ராம் ராமசாமியை வெளியேற்ற அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. அக்டோபர் ஒன்பதாம் தேதி 21 போட்டியாளர்களுடன் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது பிக்பாஸ் சீசன் 6. எப்பொழுதும் 16 போட்டியாளர்கள் அல்லது 18 போட்டியாளர்களைக் கொண்டு தொடங்கும் இந்த நிகழ்ச்சியை, முதல் முறையாக 21 பேரைக் கொண்டு ஆரம்பித்தனர். வழக்கம் போல கமலஹாசனே இந்த சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

கடைசி நிமிடத்தில் நடந்த ட்விஸ்ட்.! இந்த வாரம் வெளியேற போகும் போட்டியாளர் இவர் தானா? 1

எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு இந்த சீசன் களை கட்டி இருக்கிறது. முதல் நாள் தொடங்கி சண்டை, சச்சரவு, அடிதடி கலாட்டா என்று வீடு நிம்மதி இல்லாமல் இருந்து வருகிறது. கொரோனா காலத்தில் சீசன் 4 மற்றும் 5 எடுக்கப்பட்டது. இதில் பெரும்பாலும் விஜய் டிவியை சேர்ந்தவர்களே கலந்து கொண்டனர். இதனால் இந்த இரண்டு சீசனும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. எனவே ஆறாவது சீசனை மிகப்பெரிய வெற்றி அடைய செய்ய வேண்டும் என்று பிக்பாஸ் திட்டம் போட்டு பல சர்ச்சையான போட்டியாளர்களை உள்ளே இறக்கி இருக்கிறது. இந்த சீசனில் பெரும்பாலும் கன்டென்ட் கொடுக்கும் போட்டியாளர்களாக இருக்கின்றனர். இதுவரை மொத்தம் நான்கு போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி இருக்கிறார்கள்.

பிக்பாஸ் தொடங்கிய முதல் வாரம் எலிமினேஷன் இருக்காது. எனவே இரண்டாவது வாரத்தில் இருந்து எலிமினேஷன் செய்ய தொடங்குவார்கள். இரண்டாவது வாரம் ஜி.பி முத்து தனக்கு மன அழுத்தம் இருப்பதாக கூறி வெளியேறிவிட்டார். அந்த வாரமே நடன இயக்குனர் சாந்தியையும் எலிமினேட் செய்து அனுப்பிவிட்டனர். மூன்றாவது வாரத்தில் அசல் கோளாறும், நான்காவது வாரத்தில் ஷெரினாவும் வெளியேறி இருக்கின்றனர். இந்த நிலையில் இந்த வாரம் வாக்கெடுப்பு தொடங்கிய ஆரம்பம் முதலே மகேஸ்வரி கடைசி இடத்தில் இருந்து வந்தார். ஆனால் மகேஸ்வரி போட்டிகளில் கலந்து கொள்கிறார், அடிக்கடி சண்டை போட்டு கண்டண்டு கொடுக்கிறார். ஆனால் இரண்டு வாரங்களாக கண்வலி என்று தூங்கிக் கொண்டிருந்த ராமுக்கு மகேஸ்வரியை விட அதிக வாக்குகள் கிடைத்து வந்தது.

தற்போது திடீர் திருப்பமாக மகேஸ்வரிக்கு ஓட்டுகள் ஏறத் தொடங்கி இருக்கிறது. அவர் மிக சொற்ப வாக்கு வித்தியாசத்தில் ராமை முந்தி இருக்கிறார். இதனால் இரண்டு வாரமாக மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருந்த ராம் வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வாக்கு முடிவுகள் அனைத்தும் நம் இணையதள பக்கத்தில் எடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வமற்ற ஓட்டுகள் ஆகும். யார் வெளியேறுவார்கள் என்கிற உறுதியான தகவல் நாளை கிடைத்துவிடும். நீங்களும் நமது இணையதள பக்கத்தில் உங்கள் வாக்குளை அளிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று நமது பக்கத்தில் சென்று வாக்களிக்கவும். https://tamilglitz.in/bigg-boss-tamil-vote/

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்