இந்த வாரம் பிக்பாஸ்ஸில் இருந்து வெளியேறியது இவங்கதானா? வெளியான அதிர்ச்சி தகவல்.!

வெளியிட்டது

பிக்பாஸ் வீட்டிலிருந்து நான்காவது போட்டியாளராக ஷெரினா தற்போது வெளியேறி இருக்கிறார் என்ற தகவல்கள் தற்போது கிடைத்திருக்கிறது
பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி நான்கு வாரங்களை கடந்து விட்டது. இதில் முதல் ஆளாக ஜிபி முத்து வெளியேறி விட்டார். தன் குடும்பத்தை பார்க்க வேண்டும் என்று தொடர்ந்து அவர் மன அழுத்தத்தில் இருந்ததால் அவரை பிக்பாஸ் தானாக முன்வந்து வெளியேற்றி விட்டது. இரண்டாவதாக அதே வாரம் நடன இயக்குனர் சாந்தி மாஸ்டர் குறைந்த வாக்குகளை பெற்றதால் அவரும் வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து பெண்களிடம் முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொண்ட அசல் கோளாறை மூன்றாவதாக பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றி விட்டனர். இந்த நிலையில் இந்த வாரம் ஐந்து பேர் மட்டுமே நாமினேஷனில் இருந்தனர்.

இந்த வாரம் பிக்பாஸ்ஸில் இருந்து வெளியேறியது இவங்கதானா? வெளியான அதிர்ச்சி தகவல்.! 1

விக்ரமன், அசீம், கதிரவன், ஆயிஷா மற்றும் ஷெரினா ஆகிய ஐந்து பேர் மட்டுமே நாமினேஷனில் இருந்தனர். இதில் தற்போது ஷெரினா குறைந்த வாக்குகளைப. பெற்று வீட்டில் இருந்து வெளியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கடந்த வாரம் நடந்த பொம்மை டாஸ்க்கில் ஷெரினா தனக்கு தலையில் அடிபட்டு விட்டதாக ஒரு நாடகத்தை நடத்தினார். இதை டிவியில் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு கூட தெரியும் அவருக்கு தலையில் அடிபடவில்லை என்பது. ஆனாலும் தனலட்சுமி தான் தன்னை பிடித்து கீழே தள்ளி விட்டார் என்ற குற்றச்சாட்டை முன் வைத்தார். மேலும் அசீமுடன் சேர்ந்து கொண்டு தனலட்சுமியிடம் கடுமையான வாக்குவாதத்திலும் ஈடுபட்டார்.

இந்த வாரம் அவர் நல்ல முறையில் நடந்து கொண்ட போதிலும் மக்கள் குறைவான வாக்குகளையே அவருக்கு அளித்திருப்பது தெரியவந்துள்ளது. இதனால் இன்று பிக்பாஸ் வீட்டில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறி இருக்கிறார் என்ற தகவல் நமக்கு கிடைத்துள்ளது. நம்முடைய இணையதளத்திலும் எடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வமற்ற வாக்கெடுப்பிலும் ஷெரினாவே குறைந்த வாக்குகளை பெற்றிருக்கிறார். எனவே அவர் வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் தற்போது ஷெரினா தான் வெளியேறி இருக்கிறார் என்ற தகவல்கள் கிடைத்துள்ளது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்