தமிழ் திரையுலகின் இளம் இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் பிரதீப் ரங்கநாதன். கோமாளி என்ற படத்தை இயக்கினார். தனது முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். தற்போது இவர் நடிக்கும் ஆர்வத்தில் லவ் டுடே என்கிற படத்தை இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சாண்டி மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். பிரதீப்புக்கு ஜோடியாக இவானா நடித்துள்ளார். இவர்களுடன் சேர்த்து நடிகை ராதிகா, யோகி பாபு, சத்யராஜ், ரவீணா போன்றவர்கள் நடித்துள்ளனர். இந்த படம் குறித்த பாசிட்டிவ் விமர்சனங்களை ப்ளூ சட்டை மாறன் முன்வைத்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த கதை குறித்து பார்த்தால், பிரதீப் இவானா இருவரும் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர். இருவருக்கும் காதல் மலர்கிறது. ஆனால் இவானாவின் தந்தை சத்யராஜ் மிகவும் கடுமையானவர். இருவரும் சத்யராஜிடம் சென்று காதலை சொல்ல அவர் ஒரே ஒரு கண்டிஷன் போடுகிறார். அதில் இருவரின் மொபைல் போன்களையும் ஒரு நாள் மாற்றிக் கொள்ள வேண்டும். இருவரின் ரகசியங்கள் ஒருவருக்கு ஒருவர் தெரிந்த பின்பு திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கூறுகிறார். பின்னர் இருவரும் மொபைல் போனை மாற்றிக் கொள்கின்றனர். ஒருவரின் ரகசியங்கள் மற்றவருக்கு தெரிய வரும் போது சண்டை வருகிறது. பின்னர் அந்த சண்டை பிரிவு வரை செல்கிறது. பின்னர் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

தற்போது இந்த படம் பற்றிய தனது விமர்சனங்களை ப்ளூ சட்டை மாறன் முன் வைத்துள்ளார். அதில் அவர், படம் மிக நன்றாக இருப்பதாகவும், ஒவ்வொரு சீனையும் புதிதாகவும், விறுவிறுப்பாகவும் அமைந்து இருந்தது, திரைக்கதை மிக நன்றாக அமைந்துள்ளது. ராதிகா, யோகிபாபு நடிப்பு அருமையாக இருந்தது. படத்தில் வசனங்கள், கேமிரா வேலைகள் டெக்கினக்கல் வேலைகள் என அனைத்தும் அருமையாக இருந்தது. ஹீரோவை பார்த்தால் தனுஷ் மாதிரி பக்கத்து வீட்டு பையன் லுக்கில் இருக்கிறார். தனுஷ் மாதிரியே நடித்தும் இருக்கிறார். கண்டிப்பாக இந்த படத்தை தியேட்டரில் சென்று பார்க்கவும் என்று பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். அந்த வீடியோவை நீங்களும் காண.! Watch the below video..!
Youtube Video Code Embed Credits: Tamil Talkies