நாமினேஷனலில் சிக்கிய 5 பெண் போட்டியாளர்கள்.! இந்த வாரம் வெளியேறப் போவது யாரு?

வெளியிட்டது

பிக் பாஸ் சீசன் 6 தொடங்கி 50 நாட்களை கடந்துவிட்ட நிலையில் இந்த வாரம் நாமினேஷனுக்கு ஆறு பேர் நாமினேட் ஆகி இருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே கடுமையான போட்டியாளர்களாக இருப்பதால் இந்த பாரம் யார் வெளியே போவார்கள் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. பிக் பாஸ் சீசன் 6 தொடங்கி சுமார் 50 நாட்களை கடந்து விட்டது. இதுவரை மொத்தம் ஏழு போட்டியாளர்கள் வெளியேறி இருக்கிறார்கள். 21 நபர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 14 போட்டியாளர்களே தொடர்கிறார்கள். இந்த நிலையில் இந்த வாரம் குயின்சி, ஜனனி, கதிரவன், ரட்சிதா, மைனா, தனலட்சுமி என மொத்தம் ஆறு பேர் நாமினேஷனில் இருக்கிறார்கள். இந்த வாரம் யார் வெளியே போவார்கள் என்கிற ஆர்வம் மக்களிடையே எழுந்துள்ளது.

நாமினேஷனலில் சிக்கிய 5 பெண் போட்டியாளர்கள்.! இந்த வாரம் வெளியேறப் போவது யாரு? 1

பிக்பாஸ் தொடங்கிய முதல் வாரம் எலிமினேஷன் இருக்காது என்பதால் இரண்டாவது வாரத்தில் இருந்து எலிமினேஷன் செய்யத் தொடங்கினார்கள். இரண்டாவது வாரத்தில் ஜிபி முத்து மற்றும் சாந்தி மாஸ்டர் என இருவர் வெளியேறி விட, அடுத்தடுத்த வாரங்களில் அசல் கோலார், ஷெரினா, வி.ஜே மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர் என தொடர்ந்து வெளியேற்றங்கள் நடந்து வருகிறது. இதுவரை மொத்தம் ஏழு பேர் வெளியேறி இருக்கிறார்கள். இந்த வாரம் நடந்த நாமினேஷன் பிராசஸில் குயின்சி மற்றும் ரட்சிதாவிற்கு அதிக ஓட்டுகள் கிடைத்திருக்கின்றன. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்துவிட்டு பார்வையாளர்கள் போல் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிற காரணத்தைக் கூறி பலரும் நாமினேஷன் செய்துள்ளனர்.

மேலும் கதிரவனை பார்த்து நீங்கள் எந்த சண்டை வந்தாலும் கலந்து கொள்வதில்லை, தனியாக இருக்கிறீர்கள், அமைதியாக இருக்கிறீர்கள் இது வேலைக்கு ஆகாது என்று சொல்லி அவரையும் நாமினேஷன் செய்துள்ளனர். ஐந்து பெண் போட்டியாளர்கள் மற்றும் ஒரு ஆண் போட்டியாளர்களுடன் இந்த நாமினேஷன் நடந்துள்ளது. இதில் இந்த வாரம் யார் வெளியேறுவார்கள் என்கிற கணிப்பு மக்களிடையே எழுந்துள்ளது. நமது இணையதளத்தில் எடுக்கப்படும் அதிகாரப்பூர்வமற்ற வாக்கெடுப்பில் நீங்களும் கலந்து கொள்ள கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி வாக்களிக்கவும். https://tamilglitz.in/bigg-boss-tamil-vote/

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்