இந்த வார நாமினேஷனில் இருக்கும் அந்த 7 பேர்.! வெளியேறப் போவது யாரு?

வெளியிட்டது

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த வாரம் ஏழு பேர் நாமினேஷனில் இருக்கிறார்கள். பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி சுமார் 40 நாட்களை நிறைவு செய்திருக்கும் நிலையில்_ மொத்தம் ஆறு போட்டியாளர்கள் இதுவரை வெளியேறி இருக்கின்றனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிக்பாஸ் சீசன் சிக்ஸ் கடந்த அக்டோபர் ஒன்பதாம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. எப்போதும் போல் இல்லாத அளவிற்கு இந்த முறை 21 போட்டியாளர்களை களம் இறக்கி, கண்டண்டுகளுக்கும், பரபரப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் கொண்டு சென்று இருக்கிறது பிக்பாஸ் குழு. இதில் முக்கியமான ஒரு திருப்பம் என்னவென்றால் இந்த சீசனை 24 மணி நேரமும் பார்க்கும் வகையில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பி வருகின்றனர். இதனால் போட்டியாளர்கள் செய்யும் அனைத்தையும் நேரடியாக பார்க்க முடிகிறது.

இந்த வார நாமினேஷனில் இருக்கும் அந்த 7 பேர்.! வெளியேறப் போவது யாரு? 1

இரண்டாவது வாரத்தில் ஜிபி முத்து மற்றும் சாந்தி மாஸ்டர் வெளியேறி விட, மூன்றாவது வாரம் அசல் கோளாறு வெளியேறினார். நான்காவது வாரம் ஷெரினாவும், ஐந்தாவது வாரம் மகேஸ்வரியும் வெளியேறினர். இந்த நிலையில் நேற்று நடந்த எலிமினேஷனில் நிவாஷினி வெளியேறியிருக்கிறார். தற்போது இந்த போட்டி 15 போட்டியாளர்களுடன் நடைபெற்று வருகிறது. அடுத்த வாரம் அல்லது 10 நாட்களுக்குள் சிலர் வைல்டு கார்டு என்ட்ரிகளாக உள்ளே வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த வாரம் ஓபன் நாமினேஷன் நடைபெற்றுள்ளது. ஒப்பன் நாமினேஷன் என்றால் போட்டியாளர்கள் முன்பே அவர்களை நாமினேஷன் செய்ய வேண்டும்.

இதில் வழக்கம் போல அசீம், தனலட்சுமி, மணிகண்டன், ராம், அமுதவாணன், ராபர்ட் மாஸ்டர், கதிரவன் ஆகிய 7 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது .நமது இணையதளத்தில் எடுக்கப்படும் அதிகாரப்பூர்வமற்ற வாக்கு எண்ணிக்கையில் நீங்களும் பங்கேற்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று உங்களுக்கு விருப்பமான போட்டியாளர்களுக்கு வாக்களிக்கவும். https://tamilglitz.in/bigg-boss-tamil-vote/

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்