சொற்ப வாக்குகள் வாங்கிய 3 பெண் ஹவுஸ்மேட்ஸ்.! அப்போ இந்த வாரம் வெளிய போறது யாரு?

வெளியிட்டது

பிக்பாஸ் சீசன் 6 ஆரம்பித்து இதுவரை மொத்தம் 7 பேர் வெளியேறிவிட, இந்த வாரம் எட்டாவது ஆளாக வெளியேறப் போகும் நபர் குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. வார இறுதி நாட்கள் என்பதால் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இருந்தபோதிலும் பெண் போட்டியாளர் ஒருவர் கடைசி இடத்தை பிடித்து இருக்கிறார். பிக்பாஸ் சீசன் சிக்ஸ் தொடங்கி 55 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இதில் மொத்தம் 21 போட்டியாளர்கள் பங்கேற்றனர். எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு இந்த முறை அதிக போட்டியாளர்களைக் கொண்டு இந்த சீசன் தொடங்கப்பட்டது. தொடங்கிய நாள் முதலே சண்டை சச்சரவு என்று இருந்து வந்த இந்த சீசனில், தற்போது 14 போட்டியாளர்கள் மட்டுமே பங்கெடுத்து வருகின்றனர். மற்ற சீசன்கள் எல்லாம் ஆரம்பமே 16 போட்டியாளர்களை வைத்து தொடங்கிய நிலையில், 50 நாட்களைக் கடந்த பின்பும் 14 போட்டியாளர்கள் இருப்பது இந்த சீசனில் தான்.

சொற்ப வாக்குகள் வாங்கிய 3 பெண் ஹவுஸ்மேட்ஸ்.! அப்போ இந்த வாரம் வெளிய போறது யாரு? 1

 

எனவே வரும் வாரங்களில் இரண்டு இரண்டு பேராக எலிமினேட் செய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் தொடக்கமாக இந்த வாரம் இரண்டு பேரை எலிமினேட் செய்ய பிக்பாஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இன்னும் 50 நாட்களே இருக்கும் நிலையில் ஆட்டம் சூடு பிடிக்க தொடங்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதனால் ஆட்டத்தை விறுவிறுப்பாக இரண்டு பேர் எலிமினேட் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இந்த நிலையில் இந்த வாரம்
ஏலியன் மற்றும் பழங்குடியினர் டாஸ்க் வைக்கப்பட்டு இருந்தது. இதில் ஆரம்பம் முதலே அசீமுக்கும் மற்ற ஹவுஸ் மேட்சுக்கும் சண்டை வந்து கொண்டே இருந்தது.

இந்த வாரம் மொம்தம் ஆறு பேர் நாமினேஷனில் இருந்தனர். தனலட்சுமி, கதிரவன், குயின்சி, ரட்சிதா, மைனா, ஜனனி ஆகியோர் நாமினேஷனில் இருந்தனர். இதில் மற்ற போட்டியாளர்கள் அனைவரும் முன்னேறி சென்றுவிட குயின்சி மட்டும் பின் தங்கியிருக்கிறார். ஆட்டத்தில் சுவாரஸ்யம் இல்லாமல் பார்வையாளர் போலவே இருந்து வந்த குயின்சி இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. நமது இணையதள பக்கத்தில் எடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வமற்ற வாக்கெடுப்பிலும் குயின்சி கடைசி இடத்தையே பிடித்திருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் வம்பு சண்டை என இருக்கும் தனலட்சுமி இருந்து வருகிறார். இரட்டை வெளியேற்றம் இந்த வாரம் நடைபெற்றால், தனலட்சுமி குயின்சியுடன் வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்