பாக்கியலட்சுமி ராதிகாவின் மகனை பார்த்து இருக்கீங்களா? முதல் முறையாக மகனின் புகைப்படத்தை பகிர்ந்த ரேஷ்மா

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரேஷ்மாவிற்கு பெரிய பையன் இருக்கிறார். அந்த புகைப்படத்தை அவர் தற்போது ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார் ரேஷ்மா. இந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் உங்களுக்கு இவ்வளவு பெரிய பையன் இருக்கிறானா என்று கமெண்ட்டில் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆரம்பத்தில் விமான பணி பெண்ணாக பணிபுரிந்து வந்தவர் ரேஷ்மா. பின்னர் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தன் வாழ்க்கையை தொடங்கினார். சன் டிவியில் ஒளிபரப்பான வம்சம் என்ற தொடரின் மூலமாகத்தான் முதன் முதலில் சின்னத்திரையில் அறிமுகமானார். அதை தொடர்ந்து இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இவருடைய தந்தை பிரசாத் மிகப்பெரிய தயாரிப்பாளர் ஆவார்.

பாக்கியலட்சுமி ராதிகாவின் மகனை பார்த்து இருக்கீங்களா? முதல் முறையாக மகனின் புகைப்படத்தை பகிர்ந்த ரேஷ்மா 1

விளம்பரம்

தனது தந்தை தயாரித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா என்கிற கதாபாத்திரத்தின் மூலமாகத்தான் ரேஷ்மா மிகப் பிரபலமானார். இதுவே அவருடைய முதல் படமாகும். முதல் படத்திலேயே நல்ல வரவேற்பையும் பெற்றார். பின்னர் அவருக்கு பிக் பாஸ் சீசன் 3 யில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதில் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டார். பிக்பாஸ் வீட்டில் அவருடைய கதையை கேட்ட பலரும் கலங்கி அழுதிருந்தனர். அமெரிக்காவில் இருந்த ஒன்பது மாத கர்ப்பமாக இருந்தபோது பிரசவ வலி வந்து விட்டது. அப்போது காரை எடுத்துக்கொண்டு ஓட்டிச் சென்று கொண்டிருந்தபோதே குழந்தை வெளியில் வர ஆரம்பித்து விட்டது. பின்னர் நானே மருத்துவமனைக்கு சென்று அட்மிட் ஆகி கடைசியில் அந்த குழந்தை இறந்து விட்டது. ஒவ்வொரு வருடமும் அந்த குழந்தையை புதைத்த இடத்திற்கு அமெரிக்காவிற்கு சென்று வருவதாக பேசி இருந்தார்.

தொடர்புடையவை  ஆந்திர மாநிலத்துக்கு 3 தலைநகரங்கள் - ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு

பாக்கியலட்சுமி ராதிகாவின் மகனை பார்த்து இருக்கீங்களா? முதல் முறையாக மகனின் புகைப்படத்தை பகிர்ந்த ரேஷ்மா 3

விளம்பரம்

வாழ்க்கையில் பல கஷ்டங்களை பார்த்து இருக்கும் ரேஷ்மாவிற்கு திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை. முதல் கணவர் அமெரிக்கர் என்பதால் அவர் சைக்கோ தனமாக நடந்து கொண்டதால் அவரை விட்டு பிரிந்து விட்டார். பின்னாளில் இரண்டாவது திருமணத்திலும் அவருக்கு பிரச்சனைகள் ஏற்பட அவருடனும் விவாகரத்து பெற்றார். தற்போது தனது மகனை தனியாளாக இருந்து வளர்த்து வருகிறார். இந்த நிலையில் ரேஷ்மாவின் மகனுக்கு பிறந்தநாள் வந்துள்ளது. அந்த புகைப்படங்களை அவர் பதிவேற்றி இருந்தார். அந்த புகைப்படத்தை பார்த்த பலரும் உங்களுக்கு இவ்வளவு பெரிய பையன் இருக்கிறானா? என்று கேள்வி எழுப்பி வந்தனர். மேலும் ரேஷ்மாவின் பையனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.

விளம்பரம்

Leave a Comment