கடைசி நேரத்தில் மாறிய வாக்கெடுப்பு.! முந்திய ராபர்ட் மாஸ்டர்.! அப்ப வெளிய போறது இவரா?

வெளியிட்டது

பிக்பாஸ் சீசன் 6ல் இந்த வாரம் ஏழாவது போட்டியாளராக வெளியேறுபவர் குறித்த தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. ராபர்ட் மாஸ்டர் இந்த வாரம் வெளியேறுவார் என்று அனைவரும் எண்ணி இருந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக குறைந்த வாக்குகளை பெற்று வருகிறார் ஒரு இளம் ஆண் போட்டியாளர். பிக்பாஸ் சீசன் சிக்ஸ் கடந்த அக்டோபர் ஒன்பதாம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சுமார் 42 நாட்களுக்கும் மேலாக நடந்து வரும் இதில் இன்று வரை 6 போட்டியாளர்கள் வெளியேறி இருக்கிறார்கள். 21 போட்டியாளர்களைக் கொண்டு தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தற்போது 15 போட்டியாளர்களுடன் நடைபெற்று வருகிறது. இந்த வாரம் ஏழாவதாக ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட இருக்கிறார். அவர் குறைந்த வாக்குகளை பெற்று இருக்கிறார்.

கடைசி நேரத்தில் மாறிய வாக்கெடுப்பு.! முந்திய ராபர்ட் மாஸ்டர்.! அப்ப வெளிய போறது இவரா? 1

பிக்பாஸ் ஆரம்பித்த இரண்டாவது வாரத்தில் ஜிபி முத்துவும், சாந்தி மாஸ்டரும் வெளியேறிவிட்டனர். மூன்றாவது போட்டியாளராக அசல் கோளாறும், நான்காவதாக ஷெரினாவும் ஐந்தாவதாக விஜே மகேஸ்வரியும் வெளியேறிவிட்டனர். ஆறாவது போட்டியாளராக கடந்த வாரம் நிவாஷினி வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் தற்போது 15 போட்டியாளர்கள் மட்டுமே இருந்து வருகின்றனர். இதில் ராபர்ட் மாஸ்டர் வெளியேறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன என்று கூறப்பட்டது. இந்த வாரம் நாமினேஷனில் அசீம், கதிரவன், தனலட்சுமி, ராபர்ட் மாஸ்டர், மணிகண்டன், அமுதவாணன், ராம் ஆகியோர் நாமினேஷனில் இருக்கிறார்கள். இந்த நிலையில் ராபர்ட் மாஸ்டர் ரட்சிதா காதல் காட்சிகள் எல்லை மீறி செல்வதால் இந்த வாரம் ராபர்ட் மாஸ்டரே அதிகம் வெளியேற வாய்ப்புகள் இருப்பதாக தெரிந்தது.

ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக மணிகண்டனுக்கு குறைவான வாக்குகளே கிடைத்து வருகிறது. இன்றைய நிலவரப்படி மணிகண்டன் கடைசி இடத்தில் இருக்கிறார். நாளை ஒருநாள் வாக்கு எண்ணிக்கை இருக்கும் நிலையில் நாளை எப்படி வேண்டுமானாலும் மாறலாம். எனவே இன்றைய நிலவரப்படி மணிகண்டன் வெளியே செல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இந்த வாக்கு எண்ணிக்கை முடிவுகள் நமது இணையதளத்தில் எடுக்கப்படும் அதிகாரப்பூர்வமற்ற வாக்கு எண்ணிக்கை ஆகும். இதில் நீங்களும் கலந்து கொள்ள கீழே இருக்கும் லிங்கை கிளிக் செய்து உங்கள் வாக்குகளை அளிக்கலாம்..https://tamilglitz.in/bigg-boss-tamil-vote/

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்