Categories: சினிமா

1ரூ சம்பளத்துக்கு நடித்த “கர்நாடக சிங்கம்”! அண்ணாமலை நடித்த படத்தின் டீசர் வெளியாவதில் தாமதம்

வெளியிட்டது

தமிழ்நாடு பாஜக தலைவராக இருப்பவர் அண்ணாமலை. இவர் பதவியேற்றது முதல் ஏதேனும் ஒரு பிரச்சினையை கிளப்பி வருவதே வழக்கம் ஆகி வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினையும், திமுகவையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். சமீபத்தில் கூட திமுகவில் இருக்கும் அமைச்சர்களில் 90% பேருக்கு ஆங்கிலம் சரியாக பேசத் தெரியவில்லை, விமானத்தில் ஏறத் தெரியவில்லை என்று தனிப்பட்ட தாக்குதலில் ஈடுபட்டு இருந்தார். இதற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தன. ஆங்கிலம் என்பது மொழிதானே தவிர அறிவு இல்லை என்று ஆங்கிலத்தில் பேசி வீடியோ வெளியிட்டு பதிலடி கொடுத்து இருந்தனர் திமுக அமைச்சர்கள். டீசர் வீடியோ கீழே உள்ளது 

1ரூ சம்பளத்துக்கு நடித்த "கர்நாடக சிங்கம்"! அண்ணாமலை நடித்த படத்தின் டீசர் வெளியாவதில் தாமதம் 1

 

இவ்வாறு தொடர்ந்து சர்ச்சையை கிளப்பி வரும் அண்ணாமலை ஓர் ஐபிஎஸ் உயரதிகாரியாக கர்நாடகாவில் பணியாற்றியவர். பின்பு விருப்ப ஓய்வு பெற்று பாஜகவில் இணைந்தார். இணைந்த சில நாட்களிலேயே அவருக்கு மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டது. இவரை பாஜகவினர் “கர்நாடக சிங்கம்” என்று அழைத்து வருகின்றனர். இவர் தலைமையேற்ற பின்பு தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்து வருவது மறுக்கமுடியாத உண்மை.
தமிழ்நாட்டில் நோட்டாவுக்கு கீழ் வாக்கு சதவீதம் இருந்த பாஜகவை 4 எம்எல்ஏக்கள் வரை வாங்கி கொடுத்துள்ளார் அண்ணாமலை. நேற்று பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க சென்னை வந்த பிரமருக்கு வரவேற்பு அளிக்க பிரம்மாண்ட கூட்டத்தை கூட்டி பிரதமரையே ஆச்சரியப்பட வைத்துள்ளார் அண்ணாமலை. Youtube Video Code Embed Credits:

தற்போது அண்ணாமலை ‘அரபி’ என்ற கன்னட படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் நீச்சல் பயிற்சியாளராக நடித்துள்ளார். பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்று பல பதக்கங்களை வென்றவர் தான் கே.எஸ். விஸ்வாஸ். இரண்டு கைகள் இல்லாமல் சர்வதேச நீச்சல் போட்டியில் சாதனை புரிந்தவர். இவரின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது இந்த படம். கதாநயாகனாக விஸ்வாஸே நடிக்கிறார். அவருக்கு பயிற்சி கொடுக்கும் பயிற்சியாளராக அண்ணாமலை நடித்துள்ளார். இந்த படத்தில் நடிப்பதற்காக அண்ணாமலை வாங்கியுள்ள சம்பளம் 1ரூபாய் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் டீசர் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக டீஸர் வெளியாவது தள்ளிப்போயுள்ளது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்