இன்று காலை தனக்கு உதவி கிடைக்கவில்லை என்று விஷ்ணு விஷால் கூறியிருந்த நிலையில் 4 மணி நேரத்தில் அவரும் அவரது குடும்பமும் அமீர் கானும் மீட்கப்பட்டுள்ளனர். அந்த புகைப்படங்களை பகிர்ந்த விஷ்ணு விஷால் தற்போது அரசுக்கும், தீயணைப்பு துறைக்கும் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் ‘மிக்ஜாம்’ புயலால் 12 மணி நேரத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பல பகுதிகளும் வெள்ளக்காடாக மாறி காட்சியளிக்கிறது. இந்த நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தன்னுடைய வீட்டிற்குள் தண்ணீர் புகுந்ததை மாடியிலிருந்து புகைப்படமாக எடுத்து வெளியிட்டு இருந்தார்.

அந்த பதிவில், “தனது வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து விட்டது, காரப்பாக்கம் பகுதிகளில் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது. நான் உதவிக்காக பலரை அழைத்தேன். மின்சாரம் இல்லை. wi-fi இல்லை, போனில் சிக்னல் இல்லை, எதுவுமே இல்லை, மாடியில் சில இடங்களில் மட்டுமே சிக்னல் கிடைக்கிறது. எனக்கு விரைவில் உதவி கிடைக்கும் என்று நான் நம்பிக்கையோடு இருக்கிறேன். சென்னை மக்களை நினைத்து நான் மிகவும் வருந்துகிறேன்.” என்று பதிவிட்டு இருந்தார். அவர் பதிவிட்ட 4 மணி நேரத்தில் தற்போது அவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

தற்போது வெளியிட்டுள்ள பதிவில், சிக்கித் தவிக்கும் எங்களைப் போன்ற மக்களுக்கு உதவிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு நன்றி. காரப்பாக்கத்தில் மீட்பு பணிகள் தொடங்கியுள்ளன. ஏற்கனவே இந்த பகுதியில் 3 படகுகள் இயங்குவதைப் பார்த்தேன். இதுபோன்ற சோதனையான காலங்களில் தமிழக அரசின் பணி சிறப்பானதாக இருக்கிறது. இந்த சோதனையான காலகட்டத்தில் அயராது உழைக்கும் அனைத்து நிர்வாக மக்களுக்கும் நன்றி” என பதிவிட்டுள்ளார்.
Thanks to the fire and rescue department in helping people like us who are stranded
Rescue operations have started in karapakkam..
Saw 3 boats functioning alreadyGreat work by TN govt in such testing times
Thanks to all the administrative people who are working relentlessly https://t.co/QdoW7zaBuI pic.twitter.com/qyzX73kHmc
— VISHNU VISHAL – VV (@TheVishnuVishal) December 5, 2023