“வஞ்சிக்கப்படும் குடும்பம்….தீச்சட்டி எடுத்து பரிகாரம் செய்யும் சந்தியா – கண்ணம்மா”!!

வெளியிட்டது

சில காலமாக அறிமுகமாகி வெற்றியடைந்த கான்செப்ட் சீரியல் சங்கமம். அந்த வகையில் இப்பொது பாரதி கண்ணம்மா – ராஜாராணி சங்கமம் நடைபெற்று வருகிறது. சாமியாரால் வஞ்சிக்கப்படும் ராஜா ராணி குடும்பத்திற்கு உதவும் நோக்கில் கண்ணம்மாவும் உதவ முன்வருகிறாள் .வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"வஞ்சிக்கப்படும் குடும்பம்....தீச்சட்டி எடுத்து பரிகாரம் செய்யும் சந்தியா - கண்ணம்மா"!! 1

இப்போதைய ரசிகர்களின் பிடித்தமான தொலைக்காட்சி தொடர்கள் என்றால் பலரும் விஜய் டிவியில் ஒளிபாப்பாகும் ஏதோ ஒரு தொடரை தான் கூறுவார்கள். அவ்வாறு பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தொடர்களில் பாரதி கண்ணம்மா தொடரும் ஒன்று.  எப்போதும் டிஆர்பியில் முதலில் இல்லை என்றாலும் எதோ ஒரு இடம் பெற்றுவிடும். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் இந்த தொடர் தொடர்ந்து வரவேற்பை பெற்று வருகிறது.

அதே போல விஜய் டிவியின் மற்றொரு முன்னணி தொடர் “ராஜா ராணி 2”. முதல் சீசன் மிக பெரிய அளவில் வெற்றியடைந்த பிறகு இப்போது இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. ஹிந்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று தமிழில் “என் கணவன் என் தோழன்” என்ற பெயரில் விஜய் டிவியிலேயே நீண்ட ஆண்டுகள் முன்பு ஒளிபரப்பான இந்த தொடரை மீண்டும் தமிழில் மறுக்கம் செய்து ஒளிபரப்பி வருகிறார்கள். இதற்கும் எப்போதும் போல ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

ஏமாற்றி வரும் சாமியாரை அடித்ததால் மாட்டிக்கொள்ளும் சந்தியா மற்றும் அவளுடைய குடும்பத்தினரை ஊர் மொத்தமும் சூழ்ந்து கொண்டு சண்டை போடுகிறது. அப்போது சாமியார் கோவில் காட்ட போட்ட தடையை திரும்ப பெறவேண்டும், பாவம் செய்ததற்காக அந்த குடும்பத்தில் மூன்று பெண்கள் தீச்சட்டி எடுத்து,  இரவு ஒரு முழுவதும் சுற்றி வரவேண்டும் என கட்டளை போடுகிறான். அந்த ப்ரோமோ வீடியோ இப்பொது வெளியாகியுள்ளது.

Video Courtesy – Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்