பாலிவுட் நடிகர்களில் இளம் வயதிலேயே நல்ல படங்கள் நடித்து, மக்களுக்கு மிகவும் பிடித்த நடிகராக வளம் வருபவர் நடிகர் ரன்வீர் சிங்க். நிறையவே nepotism இருக்கும் அந்த இடத்தில் பின்புலம் இன்றி நடிப்பை மட்டுமே முதலாக போட்டு இன்று மிக முக்கிய நடிகராக இந்திய அளவில் கவனிக்கப்படுகிறார். அக்ஷன், காமெடி, நடிப்பு என வெளுத்துவாங்கும் இவர் தான் அடுத்தகட்ட இளம் நாயகர்களில் முன்னணியில் இருப்பவர்.

2010ஆம் ஆண்டு வெளியான “band baaja bharaat” படத்தின் மூலம் அறிமுகமான இவர், முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அறிமுக நடிகருக்கான பெஸ்ட் பிலிம்பேர் விருதை வென்றார். பின்னர் தொடர்ந்து Lootera(2013) மற்றும் பாலிவுட்டின் முன்னணி இயக்குனரான சஞ்சய் லீலா பன்சாலியின் “Goliyon ki Raasleela Ram-leela” படத்தின் மூலம் நிறைய ரசிகர் கூட்டத்தை சேர்த்தார்.

பின்னர் தொடர்நது “Bhajirao Mastani, Padmavaat, Simmba” போன்ற தொடர் வெற்றி படங்களை கொடுத்து சிறந்த நடிகராக உள்ளார். பிரபல நடிகை தீபிகா படுகோனேவும் ஐவரும் நீண்ட ஆண்டுகளாக காதலித்து 2018ஆம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டனர். 4 பிலிம்பேர் விருதுகள் உட்பட நிறைய விருதுகளையும் தன்னுடைய நடிப்பிற்காக வென்று குவித்துள்ளார்.

விசித்திரமாக எப்போதும் உடை அணிந்து எல்லா இடங்களுக்கும் செல்லும் ரன்வீர் சிங்க் இப்பொது ரொம்பவே கன்றாவியான போட்டோஷூட் ஒன்று நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். முழு நிர்வாணமாக அந்த புகைப்படத்தில் இருக்கும் இவரை கண்ட நெட்டிசன்கள் சரமாரியாக கலாய்த்து வருகிறார்கள்.
